பாதுகாப்பு வலயம், நலன்புரி நிலையம் வடபகுதியில் உள்ளமை உறுதியானது; அரச உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் |
இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயங்களோ, நலன்புரி நிலையங்கள் என்றோ எதுவும் இல்லை என்று இலங்கை அரசு திரும்பத் திரும்பக் கூறிவரும் நிலையில், அரசின் உயர்நிலை ஊழியர்கள் இருவர் அது தொடர்பான உண்மை நிலையைப் போட்டுடைத்துள்ளனர்.
|
-
9 மார்., 2013
யாழில் பத்திரிகை செய்தியாளர் மீது படைப்புலனாய்வாளர்கள் தாக்குதல்! மருத்துவமனையில் அனுமதி
யாழ்.குடாநாட்டில் ஊடகங்கள் மீது தொடரப்பட்டு வரும் வன்முறைகளில் ஒரு பகுதியாக இன்று யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்றின் செய்தியாளர் ஒருவர் இராணுவப் புலனாய்வாளர்களால் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உ. ஸ்ராலின் (வயது24) என்ற இளம் பத்திரிகையாளரே தாக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மணி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்
ஈழத் தமிழரைப் படுகொலை செய்த இராஜபக்சே அரசை எதிர்த்து மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி தீக்குளித்து இறந்த கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சார்ந்த மீனவச் சகோதரர் மணி அவர்களது இல்லத்திற்குப் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ
8 மார்., 2013
இன்று காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் இலயோல கல்லூரி மாணவர்கள் அய்கப் வளாகத்தில் இலங்கை அரசை கண்டித்தும் , இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ,
சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும் , இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்க வேண்டும் ,
உலகத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத் துறை அமைக்க வேண்டும் ,
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் செய்து கொண்டிருகிறார்கள் . இதில் 10 மாணவர்கள் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்கள் போராட்டம் செய்யும் பகுதி இலங்கை தூதரகம் அருகில் உள்ளதால் அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர் . மாணவர்களுக்கு அனைத்து கட்சித் தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம் . மாணவர் போராட்டம் வெல்லட்டும் .
இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம்
தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் இன்று (08.03.2013) முதல் சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள தேசிய அய்க்கப் அரங்கத்தில் ஜோபிரிட்டோ, திலீபன், சாஜிபாய் ஆண்டனி, லியோ, சண்முகப்பிரியன், பிரசாத், அனிஷ், பால் ஆகிய 8 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளன
சவூதி அரேபிய எஜமானர் எனது மனைவியை பணத்திற்காக விற்பனை செய்து வருவதாக மாத்தளையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
மாத்தளை ஹதுன்கமுவ பொத்தப்பிட்டியைச் சேர்ந்தவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்னதாக சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக சென்ற எனது மனைவியை, வீட்டு எஜாமானர் பணத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)