புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2013


ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேச மன்னிப்புச்சபை மன்மோகன் சிங்கிடம் மனு கையளிப்பு
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்தரமான சர்வதேச விசாரணையை வலியுறுத்துமாறுகோரி, 14 லட்சம் இந்தியர்கள் கையெழுத்திட்ட மனுவை டெல்லியில் பிரதமர்
மனிமோகன்சிங்கின் அலுவலகத்தில் சர்வதேச மன்னிப்புச் சபை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய நிர்வாகியான அனந்த பத்மநாபன், பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமியிடம் இந்த மனுவை இன்று பிற்பகல் நேரில் அளித்துள்ளார்.
அம்மனுவில், இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்தியா தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்க ஐ.நா. தலைமையிலான குழு, அங்கு நேரடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
அத்துடன், இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தீவிரவாத தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கோரி, கடந்த 8 மாதங்களாக, தொலைபேசியில் குரல் பதிவு மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் சர்வதேச மன்னிப்புச் சபை இந்தியாவில் ஆதரவு திரட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad