வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் இடம்பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ள 7 பேரின் விபரங்களை கட்சியின் யாழ். செயலகம் நேற்று வெளியிட்டது.