அழகிரி ஆள் என்றாலே மதுரையில் எல்லாரும் அலறிய காலம் இருந்தது. அதற்கு நேர்எதிராக அழகிரியின் ஆட்கள் வரிசையாக ஒழுங்குப் பிள்ளைகளைப் போல சப்தநாடியும் அடங்கி, ஒவ்வொருவரும் ஒரு திக்கில் அடைக்கலம் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் கடந்த வாரத்தில் நடந்தது,
-
7 மே, 2014
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதி பரிமாற்ற ஒப்பந்தப்படி இந்திய ஒப்படைக்குமா ? அகதியாக இருக்கும் இந்த 32 பேரை .பெயர் விபரம் இதோ
தடைப்பட்டியலின் படி இந்தியாவில் உள்ள 32 பேரது பெ பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு அண்மையில் தடை விதித்துள்ள 424 பெயர் விவரப்பட்டியலில் இந்தியாவில் உள்ளவர்கள் 32 பேருடைய பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.
தடைப்பட்டியலின் படி இந்தியாவில் உள்ள 32 பேரது பெ பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு அண்மையில் தடை விதித்துள்ள 424 பெயர் விவரப்பட்டியலில் இந்தியாவில் உள்ளவர்கள் 32 பேருடைய பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் இந்தத் தடை அறிவிப்பை இந்தியா ஏற்றுக் கொள்கின்றதாக இந்தியாவிலிருந்து செய்திகள் கசியத் தொடங்கியுள்ளமையால் இந்த 32 பேரின் கதியும் என்னவாகும் என்பது குறித்து கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியாவும் இலங்கையும் கைதிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் ஒன்றை 2010 ஜூன் மாதம் செய்து கொண்டிருக்கின்றன.
இதன்படி பார்த்தால் இலங்கையில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்படும் ஒருவரை இந்தியா வைத்திருந்தால் அவரை ஒப்புவிக்கும்படி இலங்கை கோரும்போது அவரை இந்தியா இலங்கையிடம் ஒப்புவித்தே ஆக வேண்டும்.
இப்போது மேற்படி பட்டியலில் உள்ளவர்களில் 32 பேர் இந்தியாவில் உள்ளனர் என்று கூறப்படும் சூழலில் அவர்களை ஒப்படைக்கும்படி இலங்கை கோரினால் இந்தியா என்ன செய்யும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இவர்களைக் கைது செய்து முறைப்படி இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும். ஆனால் ஒரு நாட்டில் இருந்து தப்பித்து இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்த இவர்களை எந்த அடிப்படையில் அந்நாட்டிடமே திரும்ப ஒப்படைப்பது என்பதில் சட்டச் சிக்கல் எழுந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய மத்திய சட்டத்துறையுடன் மத்திய உள்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி 32 பேரும் இந்தியாவிலேயே உள்ளனர் எனத் தனது தடை அறிவிப்புப் பிரகடனத்தில் இலங்கை வெளிப்படுத்தியுள்ளது அவர்களின் விவரம் வருமாறு:-
அப்பாத்துரை அமலன், இராசதுரை சசீகரன், சிவஞானசுந்தரம் சிவகரன், யோகநாதன் திலீபன், சந்தியாபிள்ளை, சிவசேகரன் விஜயநீதன், குணசீலன் ரமணன், குணேந்திர ராஜா ஜெயராஜ், அம்பிகேதேசன் ஜனார்தனன், சந்திரபோஸ் ஜெயரூபன், போலிகாப் அலெக்சாண்டர், நவரத்னம் சதீஸ்வரன், சுப்பிரமணியம் சதீஸ்குமார், கமலதாஸ்
கௌஷில்யா, ரூபசிங்கம் ஜனகாந்த், ரத்னசிங்கம் நித்தியானந்தம், பரமானந்தன் சிவராமகிருஷ்ணன், தம்பிதுரை சிவசிதம்பரநாதன், அமுதன், அந்திரஹென்னடிகே சமிந்தா தர்ஷனா, நவாஸ் (எ) சுரேஷ், ராஜேந்திரன் மூர்த்தி, சுதர்சன் கயிலநாதன், விக்னேஸ்வரன் பரமேஸ்வரி, விக்னேஸ்வரன் கந்தப்ப முத்தையாபிள்ளை
இதேசமயம் அந்தத் தடை அறிவிப்பில் இந்தியாவில் உள்ள மேலும் 6 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் வசிப்பிட முகவரியையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:- இளங்குமரன் ரஞ்சிதகுமாரி (வாலாஜாபேட்டை). செபஸ்தியன் பிள்ளை ரவிகுமார் (திண்டுக்கல் அகதிகள் முகாம்), கதிர்வேலு சிவஞானசெல்வம் (திருவள்ளுவர் நகர், திருவான்மியூர்,சென்னை),
அமல்ஆரோக்கியசாமி சந்திரவதனா (ஆதம்பாக்கம், சென்னை), அகநிலா (சேலையூர், சென்னை), தங்கய்யா தங்கம் (முதலியார்குப்பம், காஞ்சிபுரம்). ஆகியோரது பெயர் பட்டியலையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
வடக்கில் மீண்டும் ரயில் விபத்க்து .பளை நோக்கி வந்த கடுகதி ரயில் பனிச்சன்குளம் பகுதியில் யானையுடன் மோதியது
கொழும்பில் இருந்து பளை நோக்கி வந்துகொண்டிருந்த கடுகதி ரயிலில் பனிச்சன்குளம் பகுதியில் யானை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ். மாவட்ட அரச அதிபர்- வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் சந்திப்பு
வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினர்.
புலம்பெயர்ந்தோர் முதலீடுகள் யாழில் போதாது ; அரச அதிபர் கவலை
பெரிய அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழலும் அமைவிடமும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. எனவே வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து
நைஜீரியாவில் மேலும் சில சிறுமிகள் ஆயுததாரிகளால் கடத்தல்
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து 12 தொடக்கம் 15 வயதிற்கு உட்பட்ட மேலும் சில சிறுமிகளை போகோ ஹராம் ஆயுததாரிகள் கடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு மிரட்டல்
யாழ்.பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் நேற்றுப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் நேற்றுப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)