புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014




விரக்தியின் ஆற்றாமையும் தோல்வியின் அச்சமும், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனை சாபத்தின் உச்சத்திற்கே கொண்டுபோய் விட்டது.

""தர்மபுரி தொகுதியின் முடிவு ஜெ.வுக்கும் தெரிந்ததுதானே? எதற்காக தொகுதி மக்களுக்கு இவ்வளவு பெரிய சாபத்தைக் கொடுக்க வேண்டும்?'' என்று அமைச்சருக்கு நெருக்கமான ர.ர.க்கள் கூட முகம் சுழிக்கும் அளவுக்கு அமைந்துவிட்டது அமைச்சர் பழனியப்பனின் மே தினப் பேச்சு.

தர்மபுரி மாவட்ட அண்ணா தொழிற் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் பழனிச் சாமி, தர்மபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் மேடை அமைத்து மே தின விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அண்ணா தொழிற்சங்க செயலாளர் கோவிந்தராஜ், திரைப்பட இயக்குநர் ஜெயப் பிரகாஷ், மாவட்ட ஊராட்சி சேர்மன் டி.ஆர்.அன் பழகன், எம்.ஜி.ஆர். மன்ற மா.செ. ஆறுமுகம், அ.தி.மு.க. மா.செ. கே.பி. அன்பழகன் உள்ளிட் டோர் கலந்துகொண்ட இந்த விழாவில் நிறை வாக அமைச்சர் பழனியப்பன் மைக் பிடித்தார்.


பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றியெல்லாம் பேசிய அமைச்சர் பழனியப்பன், ""தொழிலாளர்களுக்கு பாதிப்பு என் றால் முதலில் குரல் கொடுப்பவர் முதல்வர் அவர் கள்தான்'' என்று தொழிலாளர் பிரச்சினைகளை பேசத் தொடங்கியவர்... திடீரென உணர்ச்சி வசப்பட்டவராக ""அம்மா உங்களுக்கு என்ன செய்யலை? தாலிக்குத் தங்கம் தரலையா?, லேப்டாப் தரலையா?, 20 கிலோ இலவச அரிசி தரலையா?, விலையில்லா ஆடு, மாடு தரலையா? எல்லாத்தையும் எங்களுக்கு... எங்களுக்கு என்று கேட்டு வாங்கிக்கொண்டு ஓட்டை மட்டும் மாத்திப்போட எப்படி மனசு வந்துச்சு? சென்ட்ரல் கவர்மெண்ட்கிட்ட சாதியைக் கூறி, நலத்திட்டங்களைப் பெற முடியுமா? சாதி பார்த்து ஓட்டுப் போட்டீங்களே... நீங்க எல்லாரும் நாசமாப் போகமாட்டீங்களா? எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சாதிக்கு ஓட்டுப் போடுறீங்க. நீங்க நல்லா இருப்பீங்களா? அந்த மோட்டாங்குறிச்சி மக்கள் நல்லாருப்பாங்களா?'' மேற்கொண்டு பேச முடியாமல் ஒருசில நிமிடங்கள் திகிலடித்தார்போல நின்றார் அமைச்சர்.

மோட்டாங்குறிச்சி என்ற ஊர், அமைச்சரின் சொந்த தொகுதியான பாப்பிரெட்டிபட்டி ச.ம. தொகுதியைச் சேர்ந்த ஊர். தேர்தலில் அமைச்சர் வாக்கு சேகரிக்கச் சென்றபோது ""ஊருக்குள் நுழையாதே!'' என்று கருப்புக்கொடி காட்டி திரும்பிப் போக வைத்த ஊர். அதனால்தான் அந்த ஊரையும் பேர் சொல்லி சாபம் கொடுத்தார்.

ஒருசில நிமிடத்திற்குப் பிறகு மீண்டும் பேசிய அமைச்சர், ""மற்ற சாதிகளை விடுங்க. இந்த கொங்கு சாதியில் ஏழு கட்சிகள் இருக்கு. ஏழு கட்சிகளுக்கும் தலைவர்கள் இருக்காங்க. ஆனால் இவர்களால் ஒழுங்காக வேலை செஞ்சு ஓட்டு வாங்கித்தர முடிஞ்சதா? ஆனால் ஒண்ணு, நன்றியை மறந்து சாதி பார்த்து ஓட்டு போட்டவர்கள் நல்லா இருக்கவேமாட்டாங்க. இது நெஜம்'' சாபத்தோடும் கோபத்தோடும் தன் மே தின பேச்சை முடித்துக்கொண்டு கிளம்பினார் அமைச்சர்.

மேடையை விட்டு இறங்கியதும் அங்கு நின்ற ஒ.செ.க்களைப் பார்த்து ""மொத்தப் பணத்துக்கும் ஒரு பைசா குறையாம கணக்கு வேணும்'' பொரிந்து தள்ளிவிட்டே போனார் அமைச்சர் பழனியப்பன்.

ad

ad