தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தங்களது சொத்துக்களை விடுவிக்கக்கோரி மனு செய்துள்ள 12 நிறுவனங்களின் மனுக்களை முதலில் விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது ஏற்கனவே விசாரணை முடிக்கப்பட்டு 7ஆம் தேதி (இன்று) தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீது இன்று தீர்ப்பு கூறிய நீதிபதி, ''மற்ற மனுக்களை விசாரிப்பதற்காக, பிரதான வழக்கு விசாரணையை நிறுத்த முடியாது. பிரதான வழக்குடன் மற்ற மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். பிரதான வழக்கில் தீர்ப்பு வழங்கும் முன்பு அனைத்து மனுக்களும் முடிக்கப்படும்'' எனக் கூறி ஜெயலலிதா மனுவை நிராகரித்தார்.