கழகம் எனக்கு தாய் - தந்தைக்கு இணையானது! கலைஞர் அறிக்கை!

நான் வழங்கும் பிறந்த நாள் செய்தி என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“காலமும், அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை” என்பது முதுமொழி. தற்போது தான் உடன்பிறப்புகள் எனது 90வது வயதைக் கொண்டாடி ஏழையெளியோருக்கு பல்வேறு வகை உதவிகள் வழங்கி நிறைவு செய்தது போல் இருக்கிறது. அதற்குள் எனக்கு 91வது பிறந்த நாளாம்! இந்த ஆண்டு என் பிறந்த நாள் விழா எதுவும் வேண்டாமென்று நான் எவ்வளவோ சொல்லியும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும், மற்றும் என்னுடன் எப்போதும் உடன் இருக்கும் கழக முன்னணியினர் சிலரும் கேட்கவில்லை. பொதுச் செயலாளர், பேராசிரியர் என் மீது வைத்து