அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் பற்றிய அறிக்கையை கோரும் ஐ.நா
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறையான நிலைமை சம்பந்தமாக தனக்கு அறிக்கை ஒன்றை பெற்றுதருமாறு ஐக்கிய நாடுகளின்-
22 ஜூன், 2014
ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையில் சாட்சியங்களை வழங்க தயாராக உள்ளவர்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமா இல்லையா என அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திருந்தது.
இந்த நிலையில், இலங்கைக்கான அமெரிக்கத் துதுவர மற்றும் அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஒருவரை சந்தித்துள்ள கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்க தூதரகத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றதுள்ளதுடன், அதில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் சர்வதேச விசாரணையில், இலங்கையை சேர்ந்த எவராவது சாட்சியமளித்தால், அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முடியும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியிருந்ததை அடிப்படையாக கொண்டே, கூட்டமைப்பு, அமெரிக்காவிடம் இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள கருத்து வெளியிடும் உரிமை இருக்க வேண்டும் என தாம் அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக் கொண்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்
பாணந்துறை தீ விபத்து மின்சார கசிவால் ஏற்படவில்லை :நோலிமிட் முகாமையாளர்
பாணந்துறையில் இன்று தீ வைக்கப்பட்ட நோலிமிட் கட்டடத்தில் மின்சார கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மாணவி பிளஸ் 2வில் உயர் புள்ளி - மருத்துவம் படிக்க மறுக்கிறது தமிழகம்

இலங்கையில் உயர்தர பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200க்கு 1170 மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க விரும்பி கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி அழைப்புக்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை அச்சுறுத்தி
பேராதனை பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை அச்சுறுத்தி
21 ஜூன், 2014
இலங்கைக்கு முஸ்லிம் நாடுகள் எச்சரிக்கை
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், இலங்கை தொடர்பான நுழைவுச்சகட்டுப்பாடுகளில் திருத்தங்களை
யாழில் பட்டம் ஏற்றும் விழா ;முதலிடம் டிராகன்
யாழில் மக்களின் 'பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா இன்று யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
இந்த பட்டங்களில் வெகும் விமர்சையாக கட்டப்பட்டதும் பறக்கவிடப்பட்டதுமான பட்டங்களுக்கான விருதுகளில் முதல் இடத்தை டிராகன் பட்டமும்,இரண்டாம் இடத்தை கடல் கன்னி உருவ பட்டமும்,தக்கவைத்து கொண்டது.
இந்த பட்டங்களில் வெகும் விமர்சையாக கட்டப்பட்டதும் பறக்கவிடப்பட்டதுமான பட்டங்களுக்கான விருதுகளில் முதல் இடத்தை டிராகன் பட்டமும்,இரண்டாம் இடத்தை கடல் கன்னி உருவ பட்டமும்,தக்கவைத்து கொண்டது.
யாழ். பள்ளிவாசல்களை முற்றுகையிட்ட அதிரடிப் படையினர்
யாழ்.குடாநாட்டில் பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம் தொழுகை இடங்கள் மீதும் கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்படும் நிலையில் குடாநாட்டிலுள்ள பள்ளிவாசல்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)