வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜபக்சக்களை கடுமையாக சாடியிருக்கிறார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,
“கடந்த அதிபர் தேர்தலில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முழுமையான பரப்புரையும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே இருந்தது. இப்போது அவர் எப்படி மாறமுடியும்? அவரால் முடியாது.
எனவே, ராஜபக்ச தோல்வியடைவார், அவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதில்லை என்ற அவரது நிலைப்பாடு சரியானதே. அதற்கு அவருக்கு அதிகாரமும் உள்ளது.
வடக்கு, கிழக்கின் நிலைமைகள் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது.
அவர்கள் புலம்பெயர்ந்தோர், இனவாதம், போர் பற்றியே பேசுகின்றனர். தமிழ் மக்களின் மனோ நிலை அத்தகைய தேசியவாதத்துக்கு எதிரானது.
பலர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எதிர்ப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்துக்கு வரும்.