தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா. இணைந்துள்ளது. இதில் தேமுதிகவுக்கு 100, மதிமுகவுக்கு 30, சிபிஐ கட்சிக்கு 26,
-
9 ஏப்., 2016
பலவீனமடைகிறதா தேமுதிக?
திமுகவுடன் கூட்டணி இல்லை, மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து செயல்படுவது என்கிற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முடிவுகள், திமுக தலைமையை மட்டுமல்ல; அடிமட்டத் தொண்டர்கள்வரை நிலைகுலையச் செய்துவிட்டிருக்கின்றன என்பது உலகறிந்த உண்மை.
தேமுதிக கட்டாயம் எங்கள் கூட்டணியில் இணையும், பழம் கனிந்து விட்டது, பாலில் விழ வேண்டியதுதான் பாக்கி என்பன போன்ற திமுகவின் அறிவிப்புகள், தொண்டர்கள் மத்தியில் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டிருந்தன. பாபா, கோச்சடையான், லிங்கா திரைப்படங்கள்போல, அந்தப் பெரிய எதிர்பார்ப்பு, பொசுக்கென்று போய்விட்டது.
தேமுதிகவைப் பொருத்தவரை, ஆரம்பம் முதலே திமுகவுடன் கூட்டணியா இல்லையா என்பதில் இரண்டு கருத்துகள் இருந்து வந்தன. பெரும்பாலான சட்டப் பேரவை உறுப்பினர்களும், கட்சியில் பல்வேறு பொறுப்பில் இருந்தவர்களும் திமுகவுடன் கூட்டணி அமைந்தால் கூடுதல் இடங்கள் கேட்டுப் பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆகிவிடலாம் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார்கள். இவர்களில் பலரும், பதவி சுகத்தை அனுபவித்து விட்டவர்கள்.
அதே நேரத்தில், விஜயகாந்தும் சரி, அவரது மனைவியும் மகளிர் அணித் தலைவியுமான பிரேமலதாவும் சரி, திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எச்சரிக்கையாகவே இருந்து வந்தனர். அதிமுகவுடனான உறவு முறிந்தது முதல், தேமுதிக உறுப்பினர்கள் பலரும் திமுகவுடன் நெருக்கமாகி விட்டிருந்தனர். இவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், திமுகவில் ஐக்கியமாகி அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவார்கள் என்பதை விஜயகாந்த் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தார்.
திமுகவுடன் கூட்டணி இல்லை என்றது முதல் தேமுதிக எம்.எல்.ஏ.க்களும், ஒருசில முக்கியமான மாவட்டச் செயலாளர்களும் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவார்கள் என்பதை தேமுதிக தலைமை எதிர்பார்த்தது. அதனால்தான், “நீங்கள் எம்.எல்.ஏ.வாவது முக்கியமா, கேப்டன் முதல்வராவது முக்கியமா?” என்கிற கேள்வியை பிரேமலதா எழுப்பினார்.
“தேமுதிகவைப் பொருத்தவரை இந்த எம்.எல்.ஏ.க்களையும், மாவட்டச் செயலாளர்களையும் சார்ந்த இயக்கமல்ல. எப்படி அதிமுகவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல தேமுதிகவில் எங்கள் தலைவர் விஜயகாந்த். அவர் ஒன்று. மற்றவர்கள் சைபர், இந்த ஒன்றுடன் சைபர் சேர்ந்தால் மட்டும்தான் அவர்களுக்கு மரியாதை. இவர்கள் வெளியேறுவதால், கட்சியின் தொண்டர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள். மாறாக, இவர்களது துரோகத்தால் கட்சி பாதித்துவிடக் கூடாது என்று மேலும் வெறியுடன் தொண்டர்கள் பணியாற்றுவார்கள். நல்லவேளை நாங்கள் திமுகவின் துரோகத்திற்கு பலியாகாமல் தப்பித்தோம்” என்கிறார் தேமுதிகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மலர்மன்னன்.
“தங்களது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிவிட்ட விஜயகாந்த்தையும், தேமுதிகவையும் சிதைப்பது என்பதில் திமுக குறியாக இருக்கிறது. அது, தேமுதிகவுக்கு அனுதாபத்தை அதிகரிக்கிறதோ இல்லையோ, விஜயகாந்த் திமுகவுடன் சேர வேண்டாம் என்று எடுத்த முடிவு சரிதான் என்கிற தோற்றத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துகிறது” என்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செங்கோட்டுவேலன்.
எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து பிரிந்து அதிமுக தொடங்கியபோதும், ஜெயலலிதா தலைமையில் அதிமுக செயல்படத் தொடங்கியபோதும், அந்தக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களைக் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கத் திமுக தூண்டிய சரித்திரம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்கள் தேமுதிகவினர்.
ஆனால், அந்த முயற்சியால் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பலவீனப்படவில்லை என்பதையும், தொண்டர்கள் அவர்களைவிட்டு அகலவில்லை என்பதையும் கூறி, அதேபோல தேமுதிகவோ, விஜயகாந்தோ எந்தவிதத்திலும் இதனால் பலவீனப்படப் போவதில்லை என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.
தேமுதிகவின் செல்வாக்கு அப்படியே இருக்கிறதா, சரிந்திருக்கிறதா என்கிற சர்ச்சைக்கு இப்போது முற்றுப்புள்ளி
மீண்டும் வெற்றிலையில் சங்கமிக்கிறது ஈபிடிபி?
இனிவரும் தேர்தல்களில் கூட்டாகப் போட்டியிடுவது குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஈபிடிபி கட்சியும்
10ம் தேதி ஆலோசனைக் கூட்டம்: தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட 10 பேர் கூட்டறிக்கை
தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் உள்ளிட்ட 10 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம்!
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் சந்திரா ஏக்கநாயக்க, இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஜேர்மன் அரசு பூரண ஆதரவு
கடந்த சில தசாப்தங்களாக ஜேர்மன் அரசாங்கம் இலங்கையின் அபிவிருத்திக்காக செய்து வரும் அளப்பெரிய பங்கிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இணையத்தளங்களுக்கு இலங்கையில் தடை?
ர்வதே தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புள்ள 60 இணையத்தளங்களை முடக்குவதற்கு இலங்கை அரசாங்கம்
தீர்மானங்களையே ஏற்காதவர்கள் திட்டமுன்வரைபை ஏற்பார்களா? கூட்டமைப்பின் தலைமையை நொந்து பிரதி அவைத்தலைவர் கேள்வி
வடமாகாண சபையின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்ட அரசியல்
8 ஏப்., 2016
பனாமா ஆவண கசிவு! பிரித்தானிய பிரதமரும் சிக்கினார்
வரி ஏய்ப்பு மற்றும் கடல் கடந்து சொத்து சேகரிப்பு தொடர்பில் பனாமா பேப்பர்ஸ் எனும் ஆவண கசிவினால் உலக நாட்டுத் தலைவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இதுதான்
தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. |
7 ஏப்., 2016
வடமாகாண சபையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான 23 முன்மொழிவுகள்சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் தீர்வு திட்ட வரைபுக்கான முன்மொழிவுகள் இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால்
ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர் வீரலட்சுமி
ஜெயலலிதாவை எதிர்த்து தேமுதிக மக்கள் நலக் கூட்டனி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வீரலட்சுமி களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. |
பனாமா பேப்பர்ஸில் 46 இலங்கையரின் ஊழல் விபரங்கள்: 13 முஸ்லிம்கள், 05 தமிழர்கள் உள்ளடக்கம்
உலகையே உலுக்கி வரும் பனாமா பேப்பர்ஸ் மூலம் செல்வந்தப் புள்ளிகளின் இரகசிய பணம் பதுக்கல் விடயம் வெளிவந்து சர்வதேச மட்டத்தில்
விஜயகாந்த், இன்றைக்கு தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியை சந்தித்துப் பேசினார்
விஜயகாந்த்தை சந்திக்க எப்போது அழைப்பு வந்தது?
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வைகோவை முன்பே சந்தித்துப் பேசிவிட்டேன். விஜயகாந்த் அண்ணனை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. இன்று காலையில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார் விஜயகாந்த்
ஜெ., பிறந்தநாள் பரிசு விசாரணை - நாகேஷ்வரராவ் வாதம்
ஜெயலலிதா பிறந்தநாள் பரிசு வழக்கின் உச்சநீதிமன்ற விசாரணையில் நாகேஷ்வரராவ் தனது வாதத்தில், ’’தமிழகத்தில் பொதுவாழ்வில்
சசிகலா தரப்பு வாதம் தொடங்குகிறது
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி அன்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் சேகர் நாப்டே தமது வாதத்தை முன்வைக்கிறார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவு பெற்றதை அடுத்து சசிகலா தரப்பு வாதம் தொடங்குகிறது.
திமுகவிலிருந்து மூ.மு.க. வெளியேறியது
அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்றக்கழகத்துக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கவில்லை. ஒரு தொகுதி கூட ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் சேதுராமன் தெரிவித்துள்ளார்
100 பௌத்த பிக்குகளின் தீவிர பாதுகாப்பில் மஹிந்த! அதிரடி அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதி செய்ய 100 பௌத்த பிக்குகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)