-
2 செப்., 2022
பசில் வெளிநாடு செல்ல 4 மாதங்களுக்கு அனுமதி!
புதிய பிரேரணை - வரவேற்கிறார் சம்பந்தன்!
![]() ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். |
வடக்கு, கிழக்கை தனி இராச்சியமாக்க அமெரிக்க தூதுவர் சதி!
![]() வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனி இராச்சியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நோக்கம் என கடுமையாக குற்றஞ்சாட்டிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, அமெரிக்க தூதுவர் மீதான தமது கடுமையான கண்டனத்தை பாராளுமன்றில் தெரிவிப்பதாகவும் சபையில் தெரிவித்தார். |
மெண்டிஸ், ஷானக, அசிதவின் அற்புதங்களுடன் திரில் வெற்றிபெற்ற இலங்கை
வங்கதேசத்தை வீட்டுக்கு அனுப்பிய இலங்கை -ஆசியக் கிண்ணத்தில் super 4 ல் இலங்கை…!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த வருட ஆசிய கிண்ணத்தின் சுப்பர் 4 சுற்றில் தனது இடத்தை உறுதிப்படுத்தியது.
மேலும் ஆசியகிண்ண டி20 போட்டியில் இலங்கை சேஷிங்கில் பெற்ற அதிகபட்ச ஸ்கோரும் சாதனையாக இருந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார்.
அதன்படி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ண
31 ஆக., 2022
சீன ட்ரோன்களை எச்சரிக்க தைவான் துப்பாக்கி சூடு - அரிதான எதிர்வினை
- பிரான்சஸ் மாவோ
- பிபிசி நியூஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES
கின்மென் என்பது சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீவுக்கூட்டங்களில் ஒரு பகுதி.
சீனாவுக்கு அருகில் உள்ள தமது தீவுகளுக்கு மேலே பறந்து சென்ற சீன ட்ரோன்களை எச்சரிக்கும் விதமாக தைவான் முதல் முறையாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு மூன்று ட்ரோன்களும் மீண்டும் சீன நிலப்பகுதியை நோக்கி திரும்பிப் பறந்ததை பார்க்க முடிந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய வாரங்களாகவே சீன ட்ரோன்கள் சீன நிலப்பகுதிக்கு அருகே உள்ள தமது தீவுக் கூட்டங்களுக்கு மேலே பறந்து வருவதாக தைவான் புகார் கூறி வந்தது.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அரசியல் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது முதல் சீன, தைவான் நீரிணை பகுதிகளில் பதற்றம் அதிகமாக உள்ளது.
பெலோசியின் வருகைக்குப் பிறகு, தைவானை ஒட்டிய கடல் பகுதிகளில் தமது படை பலத்தை பெருக்கிய சீனா மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சியிலும் ஈடுபட்டது. இதன் பின்பாக தைவான் கடல் பகுதியில் சீனா ட்ரோன்களை பறக்க விடுவதாக தைவான் கூறியது.
தைவான் தலைவர் சாய் யிங்-வென், "சில ட்ரோன்கள் ராணுவ புறக்காவல் சாவடிகளுக்கு மேல் பறந்தது - ஒரு வகை போர் நடவடிக்கை என்று அழைத்தார்.
சீன நகரமான ஜியாமெனில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூன்று கின்மென் தீவுகளான தாடன், எர்டான், ஷியு ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று சிவிலியன் ட்ரோன்கள் காணப்பட்டதாக கின்மென் பாதுகாப்பு கட்டளை மையம் கூறியது.
இதையடுத்து ஆளில்லா விமானத்தை நேரடியாகச் சுடுவதற்கு முன், எச்சரிக்கும் விதமாக தீப்பொறிகளை பறக்கும் குண்டுகளை வானை நோக்கிச் சுட்டதாக தைவான் கூறியது. இதன் பிறகு அந்த ட்ரோன்கள் ஜியாமென்னை நோக்கித் திரும்பின
சோனியா காந்தியின் தாயார் காலமானார்
கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மாணவர்கள் (
இந்தநிலையில், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கையில் முதல் இடம்பெற்ற மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் த.துவாரகேஸ்சையும், பாடசாலையில் உயர்தரத்தில் சாதனை
29 ஆக., 2022
தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! - தமிழ் தெரு விழாவில் சாணக்கியன்.
![]() இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் |
ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் இலங்கைக்கு 102 ஆவது இடம்!
![]() ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தின் மிக சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியின் (2021ஆம் வருடத்தின்) அடிப்படையில் இலங்கையானது 102ஆவது இடத்தில் காணப்படுகிறது. |
அடுத்த மாதம் பலாலிக்கு சேவையைத் தொடங்குகிறது எயர் இந்தியா!
![]() பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, வியாழன் அன்று நடைபெற்ற கூட்டத்தில், எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார் |
உயிரியல் பிரிவில் துவாரகேஸ் சாதனை!
![]() நேற்று வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார் |
புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளை ஆராய மூவர் குழு!
![]() புலம்பெயர் தமிழர்களால் முன்வைக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் நீதியரசர் அஷோக டி சில்வா தலைமையில் மூவரடங்கிய குழு ஒன்றை நீதி அமைச்சர் விஜேயதாஷ ராஜபக்ஷ நியமித்துள்ளார் |
26 ஆக., 2022
மரண அறிவித்தல்
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், ஊரெழு பொக்கணை வீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுந்தரலிங்கம் அவர்கள் 25-08-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குணரத்தினம் மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஸ்ரீகுணபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,
பர்மிளா, ஜியாமளா(கனடா), சதீஸ், துசாயினி(தொழில்நுட்ப உத்தியோகத்தர்- வீதி, அபிவிருத்தி திணைக்களம், முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்வானந்தன், வதீஸ்வரன்(கனடா), சோபிநாத்(AS Studio), தயாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அரியபுத்திரன், சின்னராசா மற்றும் பங்கையற்செல்வி, முத்துலிங்கம், சந்திராதேவி, நவரெட்ணம்(பிரான்ஸ்), நாகலட்சுமி(ஜேர்மனி), சண்முகலிங்கம்(பிரான்ஸ்), இராஜேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் தர்மபூபதி, காலஞ்சென்ற தேவராசா, கல்யாணி, சுந்தரலிங்கம், மங்களேஸ்வரி, கிருபநாதன், தர்சினி, பகீரதன், Dr.பேரின்பநாதன், வயித்திலிங்கம்(கண்ணன் லொட்ஜ்), குபேரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லாவணியன், கம்சிகா, தன்சிகா, பபிசன், சங்கீதன், யஸ்விகா, சர்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2022 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Mobile : +14372386050
- Mobile : +94779057937
- Mobile : +94776182333
- Mobile : +94774715718
- Mobile : +94776102448
- Mobile : +14372359612
- Mobile : +94774432195
அதிமுகவில் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவோம் - இயக்குனர் பாக்யராஜ்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: ஆறுமுகசாமி ஆணையம் நாளை அறிக்கை தாக்கல்
பதவிக்காலம் முடிந்து நாடு திரும்புகிறார் மிச்செல் பச்சலேட்
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள், ஆணையாளர் மிச்செல் பச்சலேட் தனது பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைந்தும் நாடு திரும்ப உள்ளார். பதவியில் இருந்து வெளியேறும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இரண்டாவது தவணை பதவியை நிராகரித்த நிலையில் சிலிக்கு திரும்பவுள்ளார் |
சைபர் போருக்கு தயாராகுமாறு இராணுவத்துக்கு அழைப்பு!
![]() எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார் |
கோட்டாவை பிரதமராக ஏற்றுக் கொள்ள நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை!
![]() கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அது அவர்களின் தேவை, ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதற்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார் |