புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2022

வங்கதேசத்தை வீட்டுக்கு அனுப்பிய இலங்கை -ஆசியக் கிண்ணத்தில் super 4 ல் இலங்கை…!

www.pungudutivuswiss.com

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த வருட ஆசிய கிண்ணத்தின் சுப்பர் 4 சுற்றில் தனது இடத்தை உறுதிப்படுத்தியது.

மேலும் ஆசியகிண்ண டி20 போட்டியில் இலங்கை சேஷிங்கில் பெற்ற அதிகபட்ச ஸ்கோரும் சாதனையாக இருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார்.

அதன்படி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ண

யிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் அபிஃப் ஹொசைன் 22 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற முடிந்தது. மெஹிதி ஹசன் 38 , மஹ்முதுல்லா 27 ஓட்டங்கள் எடுத்தனர்.

பந்துவீச்சில் சமிக கருணாரத்ன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்படி 184 ஓட்டங்கள் என்ற அபார வெற்றியை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி 19.2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் இன்னிங்ஸின் அதிகபட்ச ஓட்டமாக குசல் மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ஓட்டங்களையும், தலைவர் தசுன் ஷானக்க 45 ஓட்டங்களையும், பதும் நிஸ்ஸங்க 20 ஓட்டங்களையும், சாமிக்க கருணாரத்ன 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் எபடோட் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பங்களாதேஷ் அணி பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததன் காரணமாக போட்டித் தொடரில் இருந்து வெளியேறுவதுடன் B குழுவிலிருந்து இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சுப்பர் 4 சுற்றுக்குள் நுழைகின்றன.

YouTube தளத்துக்கு 

ad

ad