![]() குருநாகல் முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருநாகல் நகரில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து ராஜசபை கட்டடத்தை இடித்ததாக குறித்த சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது |
-
15 டிச., 2023
குருநாகல் முன்னாள் நகர முதல்வருக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை சிங்கள நாடும் அல்ல, தமிழ் நாடும் அல்ல! - என்கிறார் மனோ
![]() இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும் எனதமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். |
கொக்குத்தொடுவாய் புதைகுழி மனித எச்சங்கள் யாழ்ப்பாணத்தில் பகுப்பாய்வு
![]() முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த தகவலை சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ நீதிமன்றத்திற்கு தெரிவித்தார் |
உலகத் தமிழர் பேரவையின் முயற்சிகளை தோற்கடிப்போம்
![]() புலம்பெயர் தமிழ் மக்களினாலும் அங்கிருக்கும் ஏனைய அமைப்புகளினாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சில உதிரிகளை வைத்துக் கொண்டு ஒரு அரசாங்கமே செய்ய முடியாததை செய்ய நினைக்கும்போது அது தோற்கடிக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார் |
இமயமலைப் பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்பு இல்லையாம்! - சொல்கிறார் சுமந்திரன்
![]() இமயமலை பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது அப்பிரகடனத்துக்கும் தமக்கும் இடையிலோ எவ்வித தொடர்புமில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
வடக்கு, கிழக்கில் நாளை வரை தொடரப் போகும் கனமழை! - வெள்ள அபாயம்.
![]() வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே தோன்றியுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் கன மழையானது எதிர்வரும் 16.12.2023 வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் |
மட்டக்களப்பு அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா!
![]() மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், கிழக்கு மாகாண சபையில் பல்வேறு நிர்வாக பதவிகளை வகித்துள்ளார். |
14 டிச., 2023
'இமயமலை பிரகடனம்' என ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஜனாதிபத
![]() இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முகவர்களாக செயற்படும் உலக தமிழர் பேரவை என்ற தமிழ் துரோக அமைப்பை கொண்டு 'இமயமலை பிரகடனம்' என்ற ஏமாற்று நாடகத்தை ஜனாதிபதி அரங்கேற்றுகிறார். இது முற்றிலும் அயோக்கியத்தனமானது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார் |
அமெரிக்க காங்கிரசில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் யோசனை முன்வைப்பு
![]() இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக, பொருளாதார அபிலாஷைகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை தெரிவிக்கும் யோசனையொன்று, அந்நாட்டின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது |
13 டிச., 2023
நெல்லியடியில் மருமகனால் தாக்கப்பட்ட மாமனார் மரணம்! [Wednesday 2023-12-13 15:00]
![]() யாழ்ப்பாணத்தில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார். கரவெட்டி - நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நேசராசா அன்ரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். |
சம்பந்தனிடம் இமயமலைப் பிரகடனம்!
![]() ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுத்து இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைக் காண்பதில் பௌத்த தேரர்கள், அனைத்து அரசியல் தரப்பினர், பொதுமக்களை மையப்படுத்திய உலகத் தமிழர் பேரவையினரின் முயற்சியானது தாமதமாக முக்கெடுக்கப்படடுவதாக இருந்தாலும் அது வெற்றிபெறுவதிலேயே தமிழர்களினதும் ஒட்டுமொத்த நாட்டினதும் எதிர்காலம் தங்கிள்ளது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார் |
உலக தமிழர் பேரவையின் சந்திப்புகள் - பிரித்தானிய தமிழர் பேரவை அதிர்ச்சி! [
![]() உலக தமிழர் பேரவை இலங்கையின் சிரேஸ்ட பௌத்த மதகுருமார்களை சந்தித்தமை இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழ் மக்கள் இழந்து கொண்டிருக்கின்ற அவர்களின் அபிலாசைகளை அடைவதற்காக நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு தீவிரமாக பாடுபடும் அமைப்புகளிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. |
12 டிச., 2023
அமெரிக்காவை எச்சரித்த ஜெலென்ஸ்கி
![]() உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா தவறினால் புடினின் கனவு நனவாகும் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்லைனில் பரப்பப்பட்ட வீடியோ ஒன்றில் தோன்றிய விளாடிமிர் புடின் (Vladimir Putin), 'ரஷ்யா வலுவாக வளரும்போது உக்ரைன் பலவீனமடையும்' என தெரிவித்தார் |