![]() தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து விஞ்ஞான பாடத்துக்கு 12 புள்ளிகளைக் கொண்ட வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கற்பிக்காத பாடப்பரப்பில் இருந்து கேள்வி கேட்கும் போது பரீட்சாத்திகள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ரோஹிணி கவிரத்ன கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார் |
-
14 மே, 2024
விஞ்ஞான பரீட்சையில் நீக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து 12 புள்ளிகளுக்கான வினாக்கள்!
இனவாதப் பொலிசாரின் எடுபிடிகளாகியுள்ள நீதிமன்றங்கள்! - கஜேந்திரன் காட்டம்.
![]() வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா ? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார் |
பள்ளிமுனை கடற்பரப்பில் காற்றுடன் கடும் மழை - வள்ளம் கடலில் மூழ்கி மீனவர் பலி
![]() மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து நேற்று மாலை வள்ளத்தில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் மூழ்கி கடலில் விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் மன்னார் பள்ளிமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜான்சன் என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். |
13 மே, 2024
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்!
![]() யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இவ்வாரம் இலங்கைக்ஊ வரவுள்ளார் |
கெஹலியவுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு!
![]() தரம் குறைந்த மருந்துகளை அப்பாவி நோயாளர்களுக்கு வழங்கி அவர்களின் உயிரை ஆபத்தான நிலைக்குத் தள்ளிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரியவந்துள்ளது |
விஞ்ஞான பாட வினாத்தாளில் பாடத்திட்டத்துக்கு அப்பால் கேள்விகள்! - மதுர விதானகே குற்றச்சாட்டு
![]() கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு அமைவாக அண்மையில் நடைபெற்ற விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார் |
12 மே, 2024
தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன்? -சிறீதரனிடம் துளாவினார் இந்தியத் தூதுவர்.]
![]() எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பற்றியும், இத்தேர்தலில் வாக்களிப்பது குறித்து தமிழ் மக்கள் எவ்வாறான மனநிலையில் இருக்கின்றார்கள்? அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது பற்றியும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் எஸ். சிறீதரனிடம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கேட்டறிந்துள்ளார் |
பொது வேட்பாளர் விவகாரம் - தமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாராகிறது சிவில் பிரதிநிதிகள் குழு!
![]() தமிழ் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடனான பேச்சுக்களை விரைவில் ஆரம்பிப்பதற்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய செயற்குழு திட்டமிட்டுள்ளது |
பொதுவேட்பாளர் விடயத்தில் அவசரப்பட வேண்டாம்! - என்கிறார் சம்பந்தன்.
![]() ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி உட்பட விடயத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பிடமும் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் பகிரங்கமான வேண்டுகோள் விடுத்துள்ளா |
பொது வேட்பாளர் குறித்து ஆராய வவுனியாவில் கூடுகிறது தமிழரசின் மத்திய குழு!
![]() இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் உள்ள மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. |
9 மே, 2024
செப்ரெம்பர் 17இற்கும் ஒக்டோபர் 16இற்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல்! - அதிகாரபூர்வமாக அறிவிப்பு
![]() ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார் |
8 மே, 2024
மோசடியை அம்பலப்படுத்திய இளைஞனுக்கு நெருக்கடி கொடுத்தால் சிக்கல் வரும்!
![]() விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி ஒருவனாக இளைஞர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். எனவே தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேட்டுக்கொண்டார் |
உள்ளக பொறிமுறை மூலம் நீதி கிடைக்காது! - சுமந்திரன் கூறுகிறார்.
![]() யுத்த அத்துமீறல் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளக பொறிமுறை மூலமாக சரியான நீதி கிடைக்காது என்பதற்கு யுத்தம் முடிவடைந்த இந்த 15 வருட காலமாக எதுவுமே நடக்காமல் இருப்பதே சான்றாக உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |
யாழ்ப்பாணத்தில் வெப்ப அலையினால் 5 பேர் பலி
![]() யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார் |
வித்தியா கொலை வழக்கு - விசாரணையில் இருந்து விலகினார் நீதியரசர் துரைராஜா!
![]() புங்குடுதீவு மாணவி சிவலோக நாதன் வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து நீதியரசர் எஸ். துரைராஜா விலகியுள்ளார். |
7 மே, 2024
விசா குழப்பம் - அமைச்சரவை அதிரடி முடிவு
![]() வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும்போது 30 நாள் விசாவிற்கு ஒருவருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை பேணுவதற்கும், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது |
கட்டுநாயக்கவில் எதிர்ப்புக் குரல் எழுப்பிய இளைஞன் மீது சட்ட நடவடிக்கை பாயும்!
![]() கட்டுநாயக்க விமான நிலையத்தில் சண்டித்தனம் காட்டி, தவறான நிலைப்பாட்டை சமூகமயப்படுத்திய இளைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச விமான நிலையத்தில் ஒழுக்கமற்ற வகையில் செயற்பட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார் |
தாயை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சிறுவன் கைது!
![]() தெல்லிப்பழையில் உயிரிழந்த பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழையிலுள்ள வீடொன்றிலிருந்து 4ஆம் திகதி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது |
6 மே, 2024
வங்காள விரிகுாவில் உருவாகிறது தாழமுக்கம்?
![]() எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதியளவில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஒரு தாழமுக்கம் உருவாகி, அது சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் உள்ளதாக ஓய்வுபெற்ற மூத்த மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார் |
தெல்லிப்பழையில் வீடியோ கேமுக்கு அடிமையான மகன் - தாயைக் கொலை செய்தாரா?
![]() யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் கெனடி ஜஸ்மின் என்ற 37 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் |