திங்கள், செப்டம்பர் 24, 2012


TWENTY WORLD CUP POINTS TABLE

Group A
TeamsMatWonLostTiedN/RPtsNet RRForAgainst
India220004+2.825329/40.0216/40.0
England211002+0.650276/40.0250/40.0
Afghanistan202000-3.475216/40.0355/40.0

நடப்புச் சம்பியனை வீழ்த்திய இந்தியா 90 ஓட்டங்களால் அபார வெற்றி
இந்திய அணி நிர்ணயித்த 171 என்ற ஓட்ட இலக்கை அடைய முடியாத நடப்புச் சம்பியனான இங்கிலாந்து அணியை இந்திய அணி 90 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.
 


இருபது-20 உலகக் கிண்ண தொடரில் ஏ பிரிவில் இன்று இடம்பெற்ற லீக் போட்டியில் முன்னாள் சம்பியன் இந்தியாவும், நடப்புச் சம்பியன் அணி இங்கிலாந்தும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

அயர்லாந்து மேற்கிந்திய போட்டி மழையால் பாதிப்பு: சுப்பர்8 சுற்றுக்குள் நுழைந்தது மேற்கிந்திய அணி
 
மேற்கிந்திய தீவுகள் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழை காரணமாக முடிவு எட்டப்படாது கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட தனது குழுவில் ஓட்ட சராசரி விகிதத்தில் அயர்லாந்தை விட முன்னிலை பெற்ற மேற்கிந்திய தீவுகள்
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் முதலமைச்சர்கள் பதவியேற்பு
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான முதலமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
வடமத்திய மாகாண முதலமைச்சராக எஸ்.எம்.ரஞ்சித்தும், சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக மஹிபால ஹேரத்தும் பதவியேற்றுள்ளனர்.
 
மாலினி பொன்சேகாவின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகாவின் ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாத முதல் வாரத்தின் இறுதிப்பகுதியில் டில்லிக்கு விஜயம் செய்யவுள்ளது. 
இவ் விஜயமானது இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது .

இக்குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அங்கு சந்தித்து சமகால அரசியல் நிலைமை,அரசியல் தீர்வு மற்றும் வடக்கில் இராணுவப் பிரசன்னம் உட்பட பல முக்கிய விடயங்கள்; குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்
இலங்கையின் 18ஆவது கடற்படைத்தளபதியாக ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஜனாதிபதி மகிந்த ராஜபக்~வினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை,இதுவரை காலமும் கடற்படைத் தளபதியாக பதவிவகித்த வைஸ் அட்மிரல் சோமதிலக திசாநாயக அட்மிரல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.

யாழ். நெடுந்தீவிற்கு பா.உ சி.சிறீதரன் விஜயம்: மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வ
யாழ்.நெடுந்தீவிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் விஜயம் செய்து, பொதுமக்கள், திணைக்கள அதிகாரிகள்  மற்றும் வர்த்தகர்களை சந்தித்து நெடுந்தீவின் நிலைமை