புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2013


நடிகர், நடிகைகள் நாளை டெல்லி பயணம்

நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்களுக்கு மத்திய அரசு 12 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சேவை வரியை வாபஸ் பெற வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர். 


இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடிகர் நடிகைகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இதில் ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். தெலுங்கு, கன்னட நடிகர், நடிகைகளும் சேவை வரியை ரத்து செய் கோரி போராட் டத்தில் ஈடுபட்டனர்
இதையடுத்து, நடிகர்- நடிகைகளிடம் சேவை வரி பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. நாளை மாலை 3 மணிக்கு டெல்லியில் இந்த கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது. பட்ஜெட் குழு தலைவர் மற்றும் பட்ஜெட் குழு உறுப்பினர் ஷீலா சங்க்வான், மத்திய அரசு வருவாய் துறை செயலாளர் சுமீத்போஸ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 
இக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர், நடிகைகள்மற்றும் திரையுலகின் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் 20 பேர் சென்னையில் இருந்து நாளை காலை 6.40மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி செல்கிறார்கள்.

ad

ad