புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2014

 ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கனடா பெண்கள் ஐஸ்ஹாக்கி போட்டியில் தங்கம் வெல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது

சுவிட்சர்லாந்தை அரையிறுதிப்போட்டியில் 3-1 என்ற கோல்கணக்கில் வென்று கனடிய அணியினர் வெற்றி பெற்றனர்.

நேற்று நடைபெற்ற ஐஸ்ஹாக்கி அரையிறுதிப்போட்டியில் கனடாவும் சுவிட்சர்லாந்தும் மோதின. இரு அணிகளும் வெற்றி பெற மிகவும் கடுமையாக போராடின. ஆனாலும் கனடிய அணியினர்களின் அதிரடி தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத சுவிஸ் அணியால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது. கனடா அணி 3 கோல்கள் போட்டு அசத்தியது.
வரும் வியாழக்கிழமை கனடா அணி அமெரிக்காவுடன் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றது. நான்காவது முறையாக இறுதிப்போட்டியில் கனடாவும், அமெரிக்காவும் மோத இருக்கின்றது. இதுவரை இரு அணிகளும் மோதிய இறுதிப்போட்டியில் கனடா அணியே வென்றுள்ளதால், இந்த முறையும் அமெரிக்காவை வென்று தங்கம் வெல்லும் என கனடிய அணியினர் பெரும் நம்பிக்கையில் உள்ளனர்.
முன்னதாக அமெரிக்க அணி அரையிறுதிப்போட்டியில் சுவீடன் அணியை 6-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் அணிகள் வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் மோத உள்ளது.

ad

ad