www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

ஞாயிறு, செப்டம்பர் 07, 2014


சென்னையில் 1427 விநாயகர் சிலைகள் கரைப்பு
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 29–ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  சென்னையிலும் வழக்கமான விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.

இயக்குநர் அட்லி - நடிகை பிரியா நிச்சயதார்த்தம்

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் இயக்குனர் ஷங்கருடன் துணை இயக்குனராக பணியாற்றியவர். 

சென்னையில் ராம.கோபாலன் கைது
சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.  திருவல்லிக்கேணியில் பகுதியில் ஊர்வலம் செல்ல இந்து முன்னணி அமைப்பிற்கு காவல்துறை
மாவை எம்.பி.க்கு அமைச்சர் டளஸ் ஆலோசனை 
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக நியமனம் பெற்ற  நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் ஆளும் கட்சி அமைச்சர் டளஸ் அழகப் பெரும தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்
பேராளர் மாநாடு ஆரம்பம் 
இலங்கை தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டின் 3ஆவது நாள் பேராளர் மாநாடு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரனால் வாசிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் 15 தீர்மானங்கள் 

வவுனியாவில் இடம்பெறும் இலங்கை தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

ஐ.நாவின் புதிய ஆணையாளருடன் பேசத் தயார்! இலங்கைக்கு வருமாறு மகிந்த அழைப்பு
ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களை அணிதிரட்டி சாத்வீக வழிகளில் போராட தமிழரசுக் கட்சி தீர்மானம்: மாவை எம்.பி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் 3வது நாள் அமர்வுகள் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது.

ஷியா பிரிவு தலைவர் அல்லமா அலி அக்பர் குமெய்லி சுட்டுக்கொலை

பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் ஷியா மற்றும் சன்னி பிரிவினருக்கு இடையே தீராத நெடும்பகை இருந்து வருகிறது. ஷியா பிரிவினர்

நித்யானந்தாவுக்கு நாளை பெங்களூரில் ஆண்மை பரிசோதனை 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நித்யானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை பெங்களூரில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சி.ஐ.டி. போலீசார் செய்துள்ளனர்.
டித்துச் சென்றவர்களிடமே விசாரணை வேண்டுமா? 
சட்டமில்லாத நாட்டிலே சட்டத்தரணியாக இருப்பதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
போக்குவரத்து பாதிப்பு; பயணிகள் நிர்க்கதியில் 
கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான பேரூந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
 எங்களுக்கு யாரும் தடை போட முடியாது; என்கிறார் அனந்தி 
கணவன் இருக்கும் போதே வீட்டிற்குள் அத்துமீறி இராணுவம் நுழையும் இன்றைய நிலையில் கணவன் இல்லாத வீடுகளில் எவ்வாறு நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்? என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ரணில், கரு, சஜித் ஒரே மேடையில் - ஐ.தே.கட்சியின் மறு ஐக்கியம்
பதுளை மாவட்டம் பசறையில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 68வது மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டார்.

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணையாளர்
இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன், மனோ, அசாத் சாலி ஆகியோர் புதிய கூட்டணியில்
சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகியன இணைந்து கூட்டணி ஒன்றை ஏற்படுத்த தீர்மானித்துள்ளன.

முல்லைத்தீவில் இராணுவத்திடமிருந்து காணியை மீட்க போராடியவர் திடீர் மரணம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில்  படையினர் நிலை கொண்டிருக்கும் தன்னுடைய காணியை தன்னிடமே வழங்குமாறு கோரி வந்த உரிமையாளர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
லிபியாவில் கைப்பற்றிய 11 விமானங்களை கொண்டு அமெரிக்க மீது தாக்க திட்டமா ? அமெரிக்க அதிர்ச்சி 
செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்கர்களுக்கு ஒரு கறுப்பு தினம். கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திததி தீவிரவாதிகளால் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் விமானம் மூலம்
அமெரிக்கன் பகிரங்க சுற்றுப் போட்டிகளில் அரை இறுதி ஆடங்களில் பெரிய தலைகள் வீழ்ச்சி 
அரை இறுதி ஆட்டங்களில் முதல்தர ஆட்டக்காரர் ட்ஜோகொவிச் ஜாப்பானிய வீரர் நிஷிகொரியிடமும் மூன்றாம் தர வீரர் பெடரர் குரோசியா வீரர் சிலிசிடமும்  தோல்வி கண்டு  வெளியேறினார்கள் .இறுதியாட்டத்தில் பெரிதும் அறிந்திராத புதிய வீரர்களான செலிசும் நிசிகொரியும் மோதுகிறார்கள் . மகளிர் போட்டியில் இறுதி ஆட்டத்தில் செர்னா வில்லியம்சும் வோச்நியாக்கியும் மோதுகிறார்கள்
மகளிர் இரட்டையர் ஆட்ட இறுதியாட்டத்தில் ஹிங்கிஸ்/ பெனிட்டா  ஜோடி மகரோவ/ வேச்ணினா ஜோடியிடம் தோல்வி கண்டது 

ஆலையடி வேம்பு உதயம் வி.க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி விநாயகபுரம் மின்னொளி சம்பியன்

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக்கழகம் நடத்திய 20 வயதுக்குட்பட்ட 7 பேர் கொண்ட காற்பந்தாட்டப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி அணி சம்பியனானது.

சென்.மேரிசை வீழ்த்தி சம்பியனானது பாடும்மீன்

டார்வினின் அதிரடியான கோல்களின் மூலம் சென்.மேரிஸ் அணியைத் தோற்கடித்து சம்பியனாகியது பாடும் மீன் அணி.