புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2014


ஷியா பிரிவு தலைவர் அல்லமா அலி அக்பர் குமெய்லி சுட்டுக்கொலை

பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் ஷியா மற்றும் சன்னி பிரிவினருக்கு இடையே தீராத நெடும்பகை இருந்து வருகிறது. ஷியா பிரிவினர் சிறுபான்மையாக வசிக்கும் இடங்களில் சன்னி பிரிவினரின் கை ஓங்குவதும், சன்னிபிரிவினர் சிறுபான்மையாக வசிக்கும் இடங்களில் ஷியா பிரிவினர் ஆதிக்கம் செலுத்துவதும் தொடர்கதையாகி விட்டது. 

இந்தநிலையில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அஜீஸாபாத் பகுதியில் ஷியா பிரிவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அல்லமா அலி அக்பர் குமெய்லி என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நேற்று சுட்டுக்கொலை செய்தனர்.

அல்லமா அலி குமெய்லி ஜஃப்ரியா பாகிஸ்தான் கூட்டணி என்ற அமைப்பின் தலைவர் அல்லமா அப்பாஸ் குமெய்லியின் மகனாவார். தனக்கு சொந்தமான ஐஸ் தொழிற்சாலையில் இருந்து தனது குழந்தைகள் மற்றும் பாதுகாவலருடன் வந்த அல்லமா அலியை மர்மநபர்கள் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹூசைன், பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ad

ad