புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2014


சென்.மேரிசை வீழ்த்தி சம்பியனானது பாடும்மீன்

டார்வினின் அதிரடியான கோல்களின் மூலம் சென்.மேரிஸ் அணியைத் தோற்கடித்து சம்பியனாகியது பாடும் மீன் அணி.

அரியாலை சனசமூக நிலையத்தின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்.உதைபந்தாட்ட லீக்கின் அனுசரணையுடன் 16 வயதிற்குட்பட்ட அணிகளுக்கி டையிலான உதைபந்தாட்டப் போட்டியை நடத்தி வந்தது.

இதன் இறுதியாட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இப் போட்டியில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து நாவாந்துறை சென்.மேரிஸ் அணி மோதியது.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் முதல் பாதியாட் டத்தில் தலா ஒரு கோல்களைப் போட்டு சமநிலையில் இருந்தன.

தொடர்ந்து இரண்டாவது பாதியாட்டம் நடைபெற்ற போது இரு அணிகளும் பலமாக மோதினர்.

இதன்போது சென்.மேரிஸ் அணி வீரர் நிசான் நேர் உதை மூலம் கோல் ஒன்றினைப் பெற்றுக் கொடுத்தார்.

பதிலுக்கு பாடும்மீன் அணி வீரர் டார்வின் அடுத்தடுத்து 2 கோல்களைப் போட்டு தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இறுதியில் பாடும்மீன் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியானாகியது. 

ad

ad