புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2014


சம்பந்தன், மனோ, அசாத் சாலி ஆகியோர் புதிய கூட்டணியில்
சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகியன இணைந்து கூட்டணி ஒன்றை ஏற்படுத்த தீர்மானித்துள்ளன.
நாட்டில் இருக்கு வலுவான எதிர்க்கட்சி ஒன்றின் தேவையை பூர்த்தி செய்யவும் சிறுபான்மை இனங்களின் கோரிக்கையை வென்றெடுக்க வலுவான கூட்டணி ஒன்றின் தேவையை நிறைவேற்றும் வகையிலும் இந்த கூட்டணி ஏற்படுத்தப்படுவதாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டணியில் சிறுபான்மை இன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல கட்சிகள் இணைத்து கொள்ளப்பட உள்ளன.
சிறுபான்மை கட்சிகளின் கூட்டணியினால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படலாம் என கூறியுள்ள அவர், தமது கூட்டணியின் ஊடாக அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் தமது கோரிக்கைகள் முன்வைக்கப்படும் எனவும் குறப்பிட்டுள்ளார்.
அரசாங்கமும் எதிர்க்கட்சியும் சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை எனவும் அசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad