இறுதியில் எங்கள் வழிக்கே வந்திருக்கிறது கூட்டமைப்பு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
எங்களுடைய பாதைகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்திருக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
உணர்ச்சிப் பேச்சுக்களாலும் வெற்றுக் கோஷங்களாலும் அரசியல் தீர்வை அடைய முடியாது. நடைமுறை சாத்தியமான வழியில்தான் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழரசுக் கட்சியின் வவுனியா மாநாட்டில் சம்பந்தர் தெரிவித்த விடயத்தை குறிப்பிட்டே அவர் இதனைக் கூறினார்.
சம்பந்தனின் முடிவு கண்கெட்ட பின்னரான சூரிய நமஸ்காரம், காலம் கடந்த ஞானோதயம், எளினும் இறுதியில் எமது பாதைக்கே அவர்கள் வந்திருக்கிறார்கள். பேசியதை செயலில் காட்ட முன்வருவார்களானால் அவர்களுடன் நாங்களும் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறோம். நாம் அரசுடன் இருக்கிறோம்.
அரசுடன் இருந்துதான் எமது மக்களுக்குத் தேவையானதைக் கேட்டுப் பெறுகின்றோம். அரசுடன் இருந்து கொண்டே அரசியல் தீர்வொன்றைப் பெறவும் முயன்று வருகிறோம். எமது பாதை சரியானது. தொடர்ந்தும் அந்தப் பாதையில் பயணிப்போம். தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையும் இப்போது அந்தப் பாதைக்கு வந்திருக்கிறது. அவர்கள் பேசியது வெறும் பேச்சாக இருக்காமல் உண்மையாக இருந்தால் எமது பயணத்தில் அவர்களும் இணையலாம். இணைந்து தீர்வொன்றுக்காக பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.