லிபியாவில் கைப்பற்றிய 11 விமானங்களை கொண்டு அமெரிக்க மீது தாக்க திட்டமா ? அமெரிக்க அதிர்ச்சி
செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்கர்களுக்கு ஒரு கறுப்பு தினம். கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திததி தீவிரவாதிகளால் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் விமானம் மூலம்
தாக்குதலுக்குள்ளானது. இந்நிலையில் இம் மாதம் 11ஆம் திகதி அதே போன்று ஒரு கறுப்பு தினமாக மாறலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்கர்களுக்கு ஒரு கறுப்பு தினம். கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திததி தீவிரவாதிகளால் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் விமானம் மூலம்
தாக்குதலுக்குள்ளானது. இந்நிலையில் இம் மாதம் 11ஆம் திகதி அதே போன்று ஒரு கறுப்பு தினமாக மாறலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள விமான நிலையத்தின் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்திய போராளிகள் அங்குள்ள விமானங்களின் இறக்கைகள் மீது தாம் ஏறி நிற்கும் காட்சிகளை இணையத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் அந்த விமான நிலையத்திலிருந்து 11 விமானங்கள் காணாமல் போயுள்ளமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
திரிபோலி விமான நிலையத்தின் மீது தாக்குதலை நடத்திய போராளிகள் அங்கிருந்து தம்மால் கைப்பற்றப்பட்ட விமானங்களை பயன்படுத்தி அமெரிக்காவில் நடத்தப்பட்ட 9/11 தாக்குதலையொத்த தாக்குதலை நடத்தலாம் என அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேற்படி விமானம் காணாமல் போன சம்பவம் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது 9/11 தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு சுமார் 3 வாரங்கள் இருந்த நிலையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் செப்டெம்பர் 11ஆம் திகதியானது அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதலை மட்டுமல்லாது லிபிய பென்காஸி நகரிலுள்ள அமெரிக்க இராஜதந்திர வளாகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இரண்டாவது ஆண்டையும் குறிப்பதாக உள்ளது.
கடத்தப்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி அமெரிக்காவில் செப்டெம்பர் 11 தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் லிபியாவில் ஒரு தொகை வர்த்தக விமானங்கள் காணாமல் போயுள்ளமை கவலை தருவதாக உள்ளது என அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மொரோக்கோவைச் சேர்ந்த இராணுவ நிபுணரான அட்டெர்ரஹ்மான் மெக்கோயுயி அல் ஜஸீரா தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட்டியில் போராளி குழுவைச் சேர்ந்த முகமூடியணிந்த உறுப்பினர்கள் இந்த விமானங்களை மக்ரெப் பிராந்தியத்தில் தாக்குதல்களுக்கு பயன்படுத்தக்கூடும் என நம்பப்படுவதாக கூறினார்.
அதேசமயம் பிறிதொரு தீவிரவாதத்துக்கு எதிரான நிபுணரான செபஸ்ரியன் கொர்கா விபரிக்கையில் இந்த விமானங்கள் சவூதி அரேபியா அல்லது வட அமெரிக்காவில் தாக்குதல்களுக்கு பயன்படுத்தக்கூடும் என கூறினார்.
இந்நிலையில் போராளிகளால் செலுத்தப்படும் பயணிகள் விமானம் அல்லது இராணுவ விமானமொன்றை எவ்வாறு குறுக்கீடு செய்வது என்பது குறித்து அமெரிக்க கடற்படையினரின் ஒத்துழைப்புடனான இணைந்த பயிற்சி நடவடிக்கை மத்திய தரைக்கடல் பிராந்தியத்திலும் இத்தாலியிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மக்ஹரெபியா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.