புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2014


உலகில் சுகாதாரமாக வாழக்கூடிய 10 நகரங்கள் 
மனிதர்களாகிய எமது சுகாதாரம் நாம் எப்படி வாழ்கின்றோம் என்பதில் மட்டும் தங்கியிருப்பதில்லை. நாம் எங்கு வாழ்கின்றோம் என்பதிலும் கூடத் தங்கியுள்ளது.

அவ்வகையில் நாம் சுகாதாரத்துடன் வாழ முக்கிய பங்களிப்பு நல்கும் 10 நகரங்களின் தர வரிசைப் பட்டியலை (lifestyle) CNN ஊடகம் வெளியிட்டுள்ளது. உண்மையில் மிக சுகாதாரமான நகரம் ஒன்று அந்நகரில் வாழும் மக்களுக்கு மிக இலகுவில் அவர்கள் விரும்பும் வாழ்க்கை ஒழுங்கை வழங்க தயாராக இருக்க வேண்டும்.
இதற்கு அந்நகரங்கள் தரம் மிக்க சுகாதாரக் காப்புறுதியை வழங்குதல், வளி மாசடைதலை இயன்றளவு தவிர்த்தல் மற்றும் முன் கூட்டியே தடுக்கும் மருந்துகளின் உற்பத்தியை ஊக்குவித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட வேண்டும். உலகில் சுகாதாரத்துடன் வாழ மிகச் சிறந்த நகரங்களின் தர வரிசைப் பட்டியல் கீழே:
1.கோப்பென்ஹாகென் (டென்மார்க்)
2.ஒக்கினவா (ஜப்பான்)
3.மொன்டே கார்லோ (மொனாக்கோ)
4.வான்குவர் (கனடா)
5.மெல்பேர்ன் (அவுஸ்திரேலியா)
6.நியூயோர்க் (அமெரிக்கா)
7.ஜொன்கொப்பிங் (ஸ்வீடன்)
8.ஹவானா (கியூபா)
9.சிங்கப்பூர் (சிங்கப்பூர்)
10.நாப்பா (கலிபோர்னியா, அமெரிக்கா)
இந்த ஒவ்வொரு நாடுகளும் மனித சுகாதாரத்தைப் பேணுவதற்கு தமது உட் கட்டமைப்பு, பொருளாதாரக் கொள்கை, மருத்துவ முன்னேற்றம் மற்றும் மருத்துவக் காப்புறுதி ஆகிய விடயங்களில் தனித் தன்மையுடன் திகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad