புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2014

நெய்மருக்கு கிடைந்த அரிய வாய்ப்பு 
வரலாற்றிலேயே குறைந்த வயதுள்ள அணித்தலைவராக பிரேசில் கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் நெய்மர் பொறுப்பேற்றுள்ளார்.


சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கிண்ண கால்பந்து தொடரில் பிரேசிலுக்கு சில்வா அணித்தலைவராகவும், பயிற்சியாளராக லூயிஸ் பெலிப் ஸ்கோலரியும் பதவி வகித்தனர்.

பின்னர் அரையிறுதியில் அடைந்த படுதோல்வியை தொடர்ந்து பயிற்சியாளர் மாற்றப்பட்டு துங்கா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அணியின் புதிய அணித்தலைவராக 22 வயதேயான நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளர் துங்காவின் சிபாரிசை ஏற்று அந்த நாட்டு கால்பந்து சங்கம் இம்முடிவை எடுத்துள்ளது.

கொலம்பியாவுக்கு எதிராக இன்று நடைபெற உள்ள போட்டியில் நெய்மர் தலைமையில் பிரேசில் களமிறங்குகிறது.

இதுகுறித்து துங்கா கருத்து தெரிவிக்கையில், அணித்தலைவர் என்பவர் பிற வீரர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். அந்த வகையில் நெய்மரின் உத்வேகம் அணி முழுமையையும் தொற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன்.

அருமையான வீரர்களை அணித்தலைவராக கொண்டிருந்த போது பிரேசில் உலகக்கிண்ணத்தை வென்று காண்பித்துள்ளது. எனவே 2018ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை நெய்மர் தலைமையில் பிரேசில் அணி வெல்லும் என  அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad