புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2014

பேராளர் மாநாடு ஆரம்பம் 
இலங்கை தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டின் 3ஆவது நாள் பேராளர் மாநாடு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 


இலங்கை தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு கடந்த புதன்கிழமை மாலை வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமாகி மூன்று தினங்களாக நடைபெற்று வருகின்றது.

மூன்றாவது நாளான இன்று வவுனியா நகரில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியபின்னர் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட பேராளர்கள் ஊர்வலமாக மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இறுதி அமர்வான இன்று மாலை 4மணிக்கு கட்சியின் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக்கான உத்தியோக பூர்வ இணையத்தளம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மேலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகளும் தெரிவுசெய்யப்பட்டனர்.  தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, செயலாளராக கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த துரைராஜசிங்கம் , கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவராக பொன். செல்வராஜா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் ஆகியோரும் உப தலைவர்களாக திருகோணமலையைச் சேர்ந்த துரைரட்ணசிங்கம், அம்பாறையைச் சேர்ந்த தோமஸ் வில்லியம், வவுனியாவைச் சேர்ந்த ப.சத்தியலிங்கம், யாழ்ப்பாணத்தை சேர்ந்த எஸ்.பரஞ்சோதி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இவர்களுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களாக எம்.ஏ.சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். நிர்வாகச் செயலாளராக சி.குலநாயகம் ,பொருளாளர்களாக கனகசபாபதி, அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

ஊடகத்துறை - பா.அரியநேத்திரன், சட்டத்துறை - கே.வி. தவராசா, மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரம் - ஈ.சரவணபவன், இளைஞர் விவகாரம் - சி.சிவகரன், கல்வி மேம்பாடு - சி.தண்டாயுதபாணி, மகளிர் விவகாரம் - அனந்தி சசிதரன், பேராசிரியர் நாச்சியார், மத,பண்பாட்டு விவகாரம் - சீ.யோகேஸ்வரன், விவசாயம் - கமலேஸ்வரன், மீன்பிடித்துறை - ஆனோல்ட், சமூகமேம்பாடு - எஸ்.சிவயோகன், கலையரசன் கொள்கைப் பரப்புகை - எஸ்.வேளமாலிகிதன் ஆகியோரும் தெரிவாகினர

ad

ad