புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2014

போக்குவரத்து பாதிப்பு; பயணிகள் நிர்க்கதியில் 
கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான பேரூந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

சாலை அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பு - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட பேரூந்துகள் சில கடந்த வாரம் போக்குவரத்து பொலிஸாரிடம் கொழும்பில் மாட்டிக் கொண்டனர். இதனால் அனுமதியுடன் சேவையில் ஈடுபடும் பேரூந்து உரிமையாளர்களுக்கும் சாலை அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கும் இடையில் தகராறுகள் ஏற்பட்டன.

இதனையடுத்து யாழ். பிரதிப் பொலிஸ் அத்தியட்சகருடன் சந்திப்பு ஒன்றினை பேரூந்து உரிமையாளர்கள் மேற்கொண்டு 154 பேரூந்துகள் யாழ்- கொழும்பு சேவையில் 2013ஆம் ஆண்டு ஈடுபட்டதாகவும் இந்தஆண்டு 48 பேரூந்துகளுக்கு மட்டுமே வழி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாகவும் அவற்றில் 13பேரூந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபடுகின்றன என்றும் முறையிட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை விரையும் சேவையில் ஈடுபட வேண்டாம் என்றும் போக்குவரத்து அமைச்சருடன் பேசி தீர்வு பெற்றுத் தருவதாக அறிவித்தார். எனினும் இன்றுவரை அவர்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை.

இதனால் தொடர்ந்தும் குழப்ப நிலை உருவாகியுள்ளது. பேரூந்துகள் தாக்கப்பட்டன. இதனால் பயணிகளும் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். இவ்வாறான நிலை கடந்த ஒரு வாரகாலமாக தொடர்வதால் போக்குவரத்து செய்யும் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

சேவையில் ஈடுபடும் சில பேரூந்துகள் பயணிகளால் நிரம்பி வழிவதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகள் நின்று கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகவும் இதனால் பெரும் அசௌகரித்தை சந்திப்பதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே போக்குவரத்து அமைச்சு குறித்த விடயத்திற்கு விரைவில் நடவடிக்கை எடுத்து பயணத்தில் சீரான ஒரு கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ள

ad

ad