புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2014


செங்கோட்டை: கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி: சாலை மறியலால் பதற்றம்: போக்குவரத்து பாதிப்பு

நெல்லை மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பழைய கட்டிடம் ஒன்று நகராட்சி அலுவலத்திற்கு அருகே உள்ளது. அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிதாக காம்பிளஸ் கட்ட வேண்டும் என்று நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அந்த கட்டிடடம் இடிப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்தது. 

சனிக்கிழமை அங்குள்ள கதிரவன் காலணியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 7 பேர் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டடுள்ளனர். மாலை சுமார் 5 மணி அளவில் கட்டிடடம் இடிக்கும்போது சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. அப்போது அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த கணபதி, முத்துக்குமார், ராஜா ஆகியோர் மீது சுவர் விழுந்து அமுக்கியதால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கோட்டை நகர போலீசார், 3 பேரின் உடலையும் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். அவர்களின் 2 பேர் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொருவரின் உடலை மீட்கும்போது, தொழிலாளர்களின் உறவினர்கள் திரண்டு வந்து, உரிய இழப்பீடு இல்லாமல் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து இறந்தவரின் உடலை செங்கோட்டை கேரளா சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மாலை சுமார் 6 மணி மணிக்கு ஆரம்பித்த இந்த சாலை மறியல் 4 மணி நேரமாக நீடித்தது. இதனிடையே சாலை மறியலில் 600க்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது. செங்கோட்டையில் இருந்து கேரளா செல்லும் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் தடுத்துநிறுத்தப்பட்டன. இதனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாவட்ட எஸ்.பி.யான நரேந்திர நாயர், போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். இறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும தலா 25 லட்சம் இழப்பீடு தருவதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பு தர வேண்டும் என்று ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், சாலை மறியல் முடிவுக்கு வராமல் நீடித்தது. 

ad

ad