புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2015

ன்  ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஊழல் வழக்குகளில் 
சிக்கவைக்க துடிக்கிறார்கள்: புலம்பும் ராஜபக்சே 


இலங்கையில், கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற மைத்ரி பால சிறிசேனா வெற்றி பெற்றார். அவர் புதிய அதிபரானதும் பதவியில் இருந்தபோது அதிகார துஷ்பிரயோகம் செய்த ராஜபக்சே மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு எதிர்க்கட்சி தலைவர் திஸ்ச அந்தநாயக்கவிற்கு ராஜபக்சே மந்திரி பதவி வழங்கினார். எனவே, அவர் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் லஞ்ச ஊழல் ஆணையக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது. 

இதற்கிடையில், ராஜபக்சேவின் தம்பியான பசில் ராஜபக்சே, தனது பதவி காலத்தில், வாழ்வாதார மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தில் 5 லட்சத்து 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.3 கோடியே 29 லட்சம்) மோசடி செய்ததாக, புதிய அரசால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடித்ததால், சர்வதேச போலீஸ் உதவியை இலங்கை அரசு நாடியது.

மேலும், நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில், விசாரணை நடத்துவதற்காக நிதி குற்றத்தடுப்பு போலீஸ் முன்னிலையில் அவர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 124-ன் கீழ், கடுவலை கோர்ட் சம்மன் பிறப்பித்தது.

இதையடுத்து அவர் கொழும்பு திரும்பினார். நிதி குற்றத்தடுப்பு போலீஸ் பிரிவில் ஆஜரானார். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து 6 மணி நேரம் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

ராஜபக்சேவின் மற்றொரு தம்பியான கோத்தபய ராஜபக்சே மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் ஆஜரானார். இவர் ராஜபக்சே ஆட்சியில் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்தார். அப்போது அவன்கார்ட், லக்னலங்கா நிறுவனங்களில் நடந்த ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கைதாகி ஆஸ்பத்திரி காவலில் வைக்கப்பட்டுள்ள தனது தம்பி பசில் ராஜபக்சேவை இன்று மகிந்த ராஜபக்சே சென்று பார்த்து, நலம் விசாரித்தார். பின்னர், நிருபர்களை சந்தித்த அவர், மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான புதிய அரசு தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஊழல் வழக்குகளில் சிக்கவைக்க துடிப்பதாக தெரிவித்தார்.

அடுத்தது, கோத்தபய ராஜபக்சே, அதற்கடுத்து நான், அதையும் அடுத்து நாமல் ராஜபக்சே, பிறகு யோஷிதா ராஜபக்சே என எனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஊழல் வழக்குகளில் சிக்கவைக்க புதிய அரசு துடிக்கின்றது என்று மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்.

ad

ad