புதன், செப்டம்பர் 02, 2015

த.தே.கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஒன்று சேர்ந்து விட்டதா?: சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி


எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பொறுப்பேற்கவுள்ளார். அவருக்கு எமது பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் தேவையிருப்பதாக கருதவில்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தினில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
தமிழீழமென வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து வாக்கு கேட்ட அமிர்தலிங்கம் அப்போது எதிர்க்கட்சி தலைவரானார். அவர் அப்பதவியினை ஏற்பது சர்வதேச மட்டத்தில் எமது பிரச்சினையினை பேச உதவுமென்றனர்.
கடைசியில் வெறும் மாவட்ட சபையுடன் அவரது கதை முடிந்தது அனைவரிற்கும் தெரியும். இரா.சம்பந்தனுக்கு எமது பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் தேவையிருப்பதாக கருதவில்லை. ஏற்கனவே அது சர்வதேச மயப்படுத்தப்பட்டுவிட்டது என மேலும் குறிப்பிட்டா