புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2016

யேர்மனியில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மான வலுவூட்டல்

நிகழ்வுவட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாற்பதாண்டு நிறைவு நாளில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை
வலியுறுத்தும் வகையில் யேர்மனி Bochum நகரில்கருத்தரங்கொன்று மே 14 திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள், பிற நாட்டு மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள்,ஊடகவியாளர்கள் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு கருத்தாடலில் பங்கேற்றனர்.
பிற்பகல் 2:30 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பித்த இந்நிகழ்வு இரவு 8மணிவரை நடைபெற்றது.
தேசியக்கொடியினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் ஏற்றுவித்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.
ஈகைச்சுடரேற்றப்பட்டு தமிழீழ விடுதலைக்காய் தம் உயிரை ஈகம் செய்தமாவீரர்களுக்கும் தமிழின அழிப்பு போரில் சிங்கள பேரினவாத அரசால்கொல்லப்பட்ட தமிழ் மக்களையும் நினைவு கூரும் முகமாக சுடர் ஏற்றி மலர்தூவி,வணக்கம் செலுத்தப்பட்டது.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற "வட்டுக்கோட்டைதீர்மானம் 40" என்ற தலைப்பான இந்நிகழ்வில் வரவேற்பு உரையினை நிகழ்த்தியஅனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஊடக பேச்சாளர் திரு ஸ்டீவன் புஸ்பராஜா,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவைஇணைந்து ஒரே இலட்சினையின் கீழ் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வலுவூட்டல்நிகழ்வுகளை நடாத்தி வருவதாக தெரிவித்தார்.
முதலில் மார்ச் மாதத்தில்ஸரொக்ஹோம் நகரில் இவ்வாறான கருத்தரங்கு நடைபெற்றமையும், மே 14ம் திகதிஇந்நிகழ்வு நடைபெற்ற தினத்தில் நியூயோர்க் நகரில் நாடுகடந்தஅரசாங்கத்தினால் இதுபோன்ற கருத்தரங்கு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஜேர்மன் பொறுப்பாளர் சிறிரவீந்திரநாதன் தனது உரையில் ஒரே கொள்கையுடன் செயற்படும்அமைப்புகளுடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இணைந்து செயற்படும் எனத்தெரிவித்ததோடு மக்கள் அவைகளின் செயற்பாடுகளுக்கு தாம் தொடர்ந்து ஆதரவளித்துவருவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்த நிகழ்சிகளை சமூக பணியாளரும் , ஊடகவியாளருமான திருமதி சுகி கோபிஅவர்கள் தொகுத்து வழங்கினார். செல்வி அஞ்சனா பகிரதன் அவர்களின் தமிழீழமண்ணை போற்றிய உணர்வான தாயக பாடலுக்கான நடனம் இந் நிகழ்வில் கலந்துகொண்டமக்களை உணர்வுபூர்வமாக ஈர்ந்திருந்தது.
இணையவழி காணொலி ஊடாக உரையாற்றிய தென் ஆபிரிக்க தமிழர் தோழமை அமைப்பைச்சேர்ந்த திரு பிரகாசன் படையாட்சி ஈழத்தமிழர் தொடர்பில் தமதுஅமைப்பின் செயற்பாடுகளை விபரித்தார்.
தென் ஆபிரிக்கா அரசாங்கத்தின்அனுசரணையில் உண்மையும்,நல்லிணத்துக்குமான ஆணைக்குழு அமைப்பது பற்றிகுறிப்பிட்ட அவர் அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படாத பட்சத்தில் இவ்வாறானஆணைக்குழு அமைப்பதில் பயனில்லை என்பதே தமது நிலைப்பாடு எனக்குறிப்பிட்டார்.
கடந்த வருடத்தினைப் போன்று இவ்வருட இறுதியில் புலம்பெயர்தமிழ் அமைப்புகளை அழைத்து ஒரு மாநாட்டை நடாத்தவிருப்பதாகவும் அவரது உரையில்குறிப்பிட்டார்.
பேராசிரியர் பீற்றர் சால்க் தனது உரையில் தமிழ்த் தேசிய உணர்வினைஉருவாக்குவதில் சேர் பொன்னம்பலம் அருணாசலம், திரு செல்லப்பா சுந்தரலிங்கம்ஆகியோர் முன்னோடிகளாக செயற்பட்டமை பற்றி விபரித்தார்.
.தமிழீழ தனியரசுபற்றிய சிந்தனையின் விதையினை விதைத்தவர் திரு செல்லப்பா சுந்தரலிங்கம்என்பதினை வரலாற்றில் பதிவிட தவறிவிடமுடியாது எனக் கூறிய அவர்,திரு சுந்தரலிங்கம் அவர்களின் மதம், மற்றும் சார்ந்த நடவடிக்கைகளையும்ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அவரது பங்களிப்பினை மறுதலிக்க முடியாதுஎனக்குறிப்பிடார்.
பின்னாளில் தமீழம் நோக்கிய செயற்பாட்டில் இறங்கிய தமிழீழதேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மதம் நீக்கம் செய்யப்பட்டவகையில் அதனை முன்னெடுத்த்தாகவும் பேராசிரியர் சால்க் கூறினார்.பேராசிரியர் சால்க்யை தொடர்ந்து உரையாற்றிய பர்மிய மனிதவுரிமைசெயற்பாட்டாளர் கலாநிதி சார்ணி அவர்கள், ஈழத்தமிழர் 2009 ல் பாரியஇனப்படுகொலையை எதிர்கொண்டபோதிலும் எழு வருடங்கள் கடந்தும் தொடர்ந்தும்அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உத்வேகத்தைதருகிறது என குறிப்பிட்டார்.
ஈழத்தமிழர் மற்றும் ரோகின்கியா மக்கள்எதிர்நோக்கும் இனப்படுகொலைக்கு புவிசார் அரசியலே காரணம் என்றும்ஒடுக்கப்பட்ட மக்கள் தோழமையுடன் செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.
சிறிலங்காவில் பெரும்பான்மையினரான பௌத்தர்கள் எவ்வாறுசிறுபான்மையினருக்குரிய தாழ்வுச்சிக்கலைக் கொண்ருக்கிறார்களோ அதுபோன்றுபர்மிய பெரும்பான்யினரான பௌத்தர்களும் இத்தகைய தாழ்வுச்சிக்கலில்உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதுடன்இரண்டு நாட்டு பௌத்தகடுங்கோட்பாளர்களும் தொடர்பில் உள்ளதாகவும் அது பற்றிய விபரங்களுடன்தெரிவித்தார்.
'தமிழின அழிப்பு விடயத்தில் பொறுப்பு கூறலும் சர்வதேச நீதியும்" எனும்தலைப்பில் இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்ச்சியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள்அவையின் தலைவர் பேராசிரியர் சிறிரஞ்சன் , ஊடகவியாளர் திரு நிர்மானுசன்பாலசுந்தரம் , தமிழ் நாட்டிலிந்து மருத்துவர் எழிலன் நாகநாதன் ஆகியோர் இணையகாணொளி வழியாகவும் , அனைத்துலக இளையோர் அமைப்பு சார்பாக திரு விபிஷணன்அவர்கள் நேரிலும் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டதுடன் சபையோரின்கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்ட அதன்ஊடகத்துறை அமைச்சர் திரு. சுதர்சன் வட்டுக்கோட்டைத்தீர்மான நிகழ்வுகள்வெறும் சடங்காக இல்லாமல் அதையொட்டிய செயற்பாடுகளும் நடைபெற வேண்டும் எனவலியுறுத்தியதுடன், இது தொடர்பில் நாடுகடந்த அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும்நடவடிக்கைகள் பற்றியும் விபரித்தார்.
எமது போராட்டத்தின் நெம்பு கோல்களாக இருந்த முன்னாள் போராளிகளின்மறுவாழ்வு, வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் உதவவேண்டும் என தனதுரையில் வலியுறுத்திய திரு ராஜன் அவர்கள் அரசியற்செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக இது மேற்கொள்ளப்பட வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார்.
பல்வேறு முக்கிய அமைப்புகள் சங்கமித்திருக்கும் இத் தருணத்தில்இது ஒரு நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாக அல்லால் மனப்பூர்வமான உண்மையான எமதுபோராட்டத்துக்கான ஒருங்கிணைப்பாக மாறவேண்டும் என ´வலியுறுத்தினார்.
இறுதியாக வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதனைத் தொடரந்து மேற்கொள்ளப்பட்ட இதரதீர்மானகளும் என்ற தலைப்பில் ஊடகவியாளர் திரு கோபி ரத்தினம்உரையாற்றியதுடன்.
தேசிய இனங்களின் சுயநிரண்யக் கோரிக்கை சர்வதேச சட்டமாகமாற்றப்பட்ட வெஸ்ற் பாலின் (Westphalian) உடன்படிக்கை பற்றியும்விளக்கினார்.
இந் நிகழ்வில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு சார்ந்த செல்வன் செழியன்,பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக இளைப்பாறிய ஆசிரியர் திருசத்தியதாசன் ஆகியோரும் உரையாற்றினர்.
சத்தியதாசன் அவர்கள்"வட்டுக்கோட்டை தீர்மானம் 40 " கருத்தரங்கு 40 வருடங்களின் பின்னோக்கியஅனுபவப்பகிர்வாக மட்டும் அல்லாமல் எமது முன்னோக்கிய போராட்டத்தின்குறியீடாகவும் அமையவேண்டும் வேண்டும் என்று தமது உரையில் வலியுறத்தினார்.
அவையோரின் முழுமையான பங்கேற்றலுடன் நடைபெற்ற இன்நிகழ்வில் பலர் ஆர்வத்துடன்கலந்து கொண்டனர், முக்கியமாக யூட், ஜெயா, ஈழவேந்தன் போன்றோரிடம் இருந்துவந்த காத்திரமான கேள்விகள் நிழ்ச்சிக்கு வலுயூட்டின.
நிகழ்வின் இறுதியில் இறைமை கொண்ட தமிழீழ தனியரைசை வென்றெடுக்கும் வரை நாம்ஓர்மத்துடன் தொடர்ந்தும் தேசம் நோக்கிய பணியில் ஒருங்கிணைந்து உழைப்போம் எனஉறுதி எடுக்கப்பட்டது.

ad

ad