செவ்வாய், நவம்பர் 13, 2018

காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்

ஜனாதிபதியினால் நவம்பர் 04 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2095/50 வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய  நாளை
காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். 

அதன்படி நாளை காலை 10 மணிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்றுக்கு சமூகமளிக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளை நாளை காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.