புதன், ஜூன் 05, 2019

சட்டம் ஒழுங்கு, ஊடக இராஜாங்க அமைச்சுக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு…

சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சு மற்றும் ஊடக அமைச்சினை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இருவருக்கு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான அமைச்சர் மங்கள சமரவீர, கபீர் ஹாசீம் ஆகியோரை ஜனாதிபதி சந்தித்த போதே ஜனாதிபதி இந்த நியமனங்களை வாங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையில் பரந்துபட்ட கூட்டணி தொடர்பிலான பேச்சுக்கள் சாதகமாக அமையாத நிலையில், அடுத்த தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் மகிந்த அணியினருக்கு ஆதரவு கொடுக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது