புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஜூன், 2019

இன்று அவசரமாக செல்கின்றது ராஜினாமா கடிதம்?

தமது பதவி விலகல் கடிதத்தை கூட்டாக கைச்சாத்திட்டு வழங்கி இருந்தோமென முஸ்லிம் அமைச்சர்கள் சார்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விளக்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நோன்பு பெருநாளால் தாமதமாகி இருந்த பிரத்தியேக பதவி விலகல் கடிதங்கள் தற்போது அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் பிரதமரும் இதனை உறுதிப்படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே முஸ்லிம் அமைச்சர்கள் யாரும் இன்னும் பதவி விலகவில்லை.
விலகுவதாக சொன்னார்களே தவிர, இன்னும் யாரும் பதவி விலகல் கடிதங்களை கையளிக்கவில்லை. அத்துடன் அமைச்சுக்கான வாகனங்களையே அவர்கள் பயன்படுத்துகின்றனரென அம்பலப்படுத்தப்பட்டுள்ளமை தெரிந்ததே.