புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2019

நேர்முகத் தேர்வில் அரசியல் தலையீடு!

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் நியமனத்திற்காக இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் அரசியல் தலையீடு காணப்படுவதாக சுகாதாரத் தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, சுகாதாரத் தொண்டர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கப்படவேண்டும் எனவும் இம்முறையும் தமது நியமனம் தட்டிக்கழிக்கப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்திலுள்ள கட்டடத்தில் இன்று (புதன்கிழமை) வட. மாகாண சுகாதாரத் தொண்டர்களின் ஐந்து மாவட்டங்களின் செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே சுகாதாரத் தொண்டர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தெரிவிக்கையில்,“கடந்த 2014ஆம் ஆண்டு வடக்கில் தொள்ளாயிரம் சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரையிலும் பல போராட்டங்களுக்கு மத்தியிலும், அதிகாரிகளுடன் பல சந்திப்புக்களை மேற்கொண்டும் இறுதியாக வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வின்போது எங்களுடைய நியமனம் தொடர்பாக விசேட தீர்மனம் ஒன்று எடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், வடக்கில் சுகாதாரத் தொண்டர்களாக 2014 தொடக்கம் பெயர்ப் பட்டியலிலுள்ளவர்களுக்கு கல்வித்தகைமை பாராமல் சுகாதாரத் தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு விசேட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத்தீர்மானத்திற்கு அமைவாக நேர்முகத் தேர்வும் இடம்பெற்றது.

கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கு நியமனம் வழங்குவதில் பயன்படுத்தப்பட்டது. இம்முறையும் எங்களுக்கு அந்த அநீதி நடைபெறும் என்று நாங்கள் அஞ்சுகின்றோம்.

தொள்ளாயிரம் பேருக்கிடையே எங்களுடைய சுகாதாரத் தொண்டர்கள் இருக்கின்றனர்.

தற்போது மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளது.

ஆனால் எடுக்கப்பட்ட விசேட தீர்மானத்திற்கு அமைவாக கல்வித் தகைமை பாராமல் யுத்த காலத்தில் பணிபுரிந்த தொண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நியமனம் வழங்கவேண்டும். இந்த சுகாதாரத் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட பின்னரே மேலதிகமாக உள்வாங்கப்படவேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

நாங்கள் கடந்த காலத்தில் பல போராட்டங்களை மேற்கொண்டது எமது வாழ்க்கைப் பிரச்சினைக்காகவே. எமக்கு வேலை கட்டயமானது. எமது பல போராட்டத்திற்கு மத்தியிலேயே எமக்கு இந்த நேர்முகத் தேர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்விடயத்தில் எமக்கு சாதகமான பதில் கிடைக்காவில்லையென்றால் இங்கு கூடியுள்ள அனைவரும் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

ad

ad