திங்கள், ஜூலை 01, 2019

கல்வி அமைச்சர் காரியவசமிடம் 03 மணித்தியாலங்கள் விசாரணை

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 03 மணித்தியாலங்களின் பின்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். பாடசாலை புத்தக அச்சீட்டின் போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் புகைப்படம் பொறிக்கப்படுவதன் காரணமாக பணம் வீண் விரயம் செய்யப்படுவதாக குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பில் அந்த ஆணைக்குழு கல்வி அமைச்சர் அகில விராஜ்காரிய வசத்திற்கு அறிவித்தல் ஒன்றை விடுத்தது. இதற்கமைய அவர் இன்று முற்பகல் 9.20 அளவில் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையானதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.