புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2012


பிள்ளையான் மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை!- அடுத்த முதல்வர் கருணாவின் சகோதரி?
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் முதல்வராக வாய்ப்புக் கிடைக்காது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றால், சந்திரகாந்தன் மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை என சிறிலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள், இந்தத் தேர்தலில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் சகோதரி ருத்ரமலர் ஞான பாஸ்கரன் போட்டியிடுவதால் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு சந்திரகாந்தனுக்கு மறுக்கப்படலாம் என்று கூறியுள்ளன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ்மட்டத் தலைவர்கள் ருத்ரமலருக்காக பரப்புரைகளை செய்துவரும் அதேவேளை, சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் பலரும் கருணாவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து பலர் வெளியேறியுள்ளதை அடுத்து, கிழக்கில் சந்திரகாந்தனின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ad

ad