புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2012


தமிழ் பெண்களை இலக்கு வைத்து பாலியல் வேட்டையில் இறங்கியுள்ள வல்வை பொலிஸ் அதிகாரி
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் நடத்திவரும் பாலியல் வேட்டை தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் பலவும் வலியுறுத்தியுள்ளன.
படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனோரது குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் முன்னாள் பெண் போராளிகளை இளம் விதவைகளை  இலக்கு வைத்தே இவ்வதிகாரி தனது வேட்டையினை மேற்கொண்டு வருகின்றார்.
வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டரான பிரிய தர்சன என்பவருக்கு எதிராகவே இவ்வாறு பொது அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இவரது அடாவடிகள் எல்லையில்லாது அதிகரித்து செல்கின்ற போதும், பாதிக்கப்படும் பொது மக்கள் அச்சங்காரணமாக பகிரங்கமாக முன்வந்து முறைப்பாடுகளை செய்ய மறுத்தே வருகின்றனரென சிவில் சமூகப் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
மேலும் 2006ம் ஆண்டு காலப்பகுதிகளினில் காணாமல் போன தனியார் கல்வி நிலைய நிர்வாகி ஒருவரது மனைவி மற்றும் பிள்ளைகளை தனது கட்டுப்பாட்டினுள் வைத்துக் கொண்டுள்ளதுடன் அவர்களை அடிமை போன்றே கையாண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
தெற்கை சேர்ந்த குறித்த அதிகாரியினது மனைவி குடும்பம் தெற்கிலுள்ள போது, தனியாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு சேர்ந்த பகுதிகளினில் அவரது கைங்கரியம் கட்டுப்பாட்டை தாண்டி செல்வதாக நகரசபை அங்கத்தவர்கள் சிலரும் கருத்து தெரிவித்தனர்.
குறிப்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட கிராமமொன்றினில் குறித்த சப் இன்ஸ்பெக்டரது பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக முன்னாள் பெண் போராளியொருவர் தீக்கிரையாகி தற்கொலை செய்து கொண்டமையும் அம்பலத்திற்கு வந்துள்ளது.
தனிப்பட்ட ரீதியினில் ஆட்களை பழி வாங்குவது மற்றும் நீதிமன்றங்களினில் வழக்குகளை தாக்கல் செய்து அலைக்கழிக்கப்படுவதென இந்நபருக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்புகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
குறிப்பாக பாடசாலை மாணவிகள் சிலர் கூட இவரது வலைக்குள் வீழ்த்தப்பட்டு பின்னர் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மக்கள் மனங்களை வெல்லப்போவதாகவும் மக்களுக்கு சேவை ஆற்றப்போவதாகவும் அடிக்கடி பத்திர்கையாளர்களை சந்தித்து அறிக்கைகள் வாசிக்கும் பொலிஸ் அதிகாரிகள் இவரது விடயத்தினில் கண்டும் காணாமலும் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
குறித்த வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தினில் கடமையாற்றி வரும் தமிழ் பொலிஸார் தகவல்களை உறுதிப்படுத்தியதுடன் தங்களால் ஏதும் செய்யமுடியாத பரிதாபகரமான நிலையில் இருப்பதையும் ஏற்றுக்கொண்டனர்.

ad

ad