புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2012

அடுத்த மாதம் சிறிலங்கா வருகை தரவுள்ளது ஐ.நா மனிதவுரிமைகள் பேரவைக் குழு
ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அடுத்த மாதம் சிறிலங்கா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சிறிலங்காவின் மனிதவுரிமைகள் நிலைமை குறித்து நேரில் பார்வையிடும் நோக்குடனேயே இக்குழு சிறிலங்காவுக்கு வரவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. 

சிறிலங்காவின் மனிதவுரிமை குறித்து ஆராயும் நோக்கில் ஐ.நா குழு சிறிலங்கா வருவதற்கு அனுமதிக்க முடியாது என சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலங்களில் கூறி வந்தது.

ஆனால் தற்போது, சிறிலங்கா அரசாங்கம் அதற்கு அனுமதி கொடுத்துள்ள நிலையிலேயே, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு அடுத்தமாதம் 14ம் நாள் கொழும்புக்கு வரவுள்ளதாக் கூறப்படுகிறது.

இந்தக் குழுவினர் சிறிலங்காவின் வடக்குப் பகுதிகளுக்கு மட்டுமன்றி, தென்பகுதிக்கும் சென்று அங்குள்ள மனிதஉரிமைகள் நிலை குறித்து மதிப்பீடு செய்யவுள்ளனர்.

ad

ad