புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2012

சக்தி தொலைக்காட்சி பார்க்க வேண்டாம் என்கிறார் ஆளும் கட்சி வேட்பாளர் பூ. பிரசாந்தன்
மட்டக்களப்பு ஆரையம்பதியில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய முக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தற் பிரசாரக் கூட்டத்தின் போது மக்கள் முன்னிலையில் வேட்பாளர் பூ. பிரசாந்தன் அவர்கள் சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது காரசாரமான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தார்.
அவர் கூறும் போது:
தானும் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் பலரும் கடந்த பெருவெள்ளத்தின் போது வெள்ளத்தால் மூடுண்டிருந்த சித்தாண்டி கிராமத்துக்குச் சென்று நெஞ்சளவு வெள்ளத்தில் இறங்கி மக்களுக்கான மனிதாபிமான மீட்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது,
சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் நிவாரண வாகனம் அங்கு வந்ததாகவும், அவர்கள் அதனை மக்களுக்குப் பகிர்ந்தளிக்காமல் மக்களிடம் விபரங்களைக் கேட்டும் அதனை வீடியோவில் பதிவு செய்து கொண்டும் இருந்ததாகவும், ஆனால் நிவாரணப் பொருட்களை அவர்கள் பகிர்ந்தளிக்க முயற்சிக்காததால் பின்னர் தாம் தலையிட்ட போதும் அவர்கள் பகிர்ந்தளிக்க முயற்சிக்கவில்லை எனவும் கூறினார்.
பலமணி நேரத்தின் பின்னர் தாம் இந்த மக்களின் பிரதிநிதிகள் எங்களது கட்டளையை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறியதை அடுத்து சக்தி நிறுவனத்தினர் பசியோடு இருந்த மக்களை பிச்சைக்காரார்கள் போல வரிசையாக வீதியிலே வரச் சொல்லி வீடியோ எடுத்துக் கொண்டு நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளித்ததாகவும் கூறினார்.
இந்த முரண்பாட்டின் பின்னர் அவர் சக்தி தொலைக்காட்சி பார்ப்பதில்லை எனவும் அவர்கள் தன்னுடைய மற்றும் சந்திரகாந்தன் ( பிள்ளையான் ) ஆகியோரின் மேடைப் பேச்சுக்களை ஒளிபரப்புவதில்லை எனவும் கோபம் காரணமாக அவர்கள் கூட்டமைப்பினருக்கே இப்போது சந்தர்ப்பம் கொடுத்து வருவதாகவும் கூறினார்.
ஆகவே என்னைப் போல நீங்களும் சக்தி தொலைக்காட்சியை பார்க்க வேண்டாம் எனவும் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

ad

ad