கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாதது கூட்டமைப்பு விட்ட தவறு: சட்டத்தரணி ஸ்ரீகாந்தா
இன்று மட்டக்களப்பு தேற்றாத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை வேட்பாளர் கோவிந்தன் கரணாகரம் (ஜனா) என்பவரை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு மேலம் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கு பிரதேசம் 88000 சதுரமைல் பிரதேசத்தினைக் கொண்டுள்ளது. இது எமது தாயக பூமி. ஆனால் தற்போது திருகோணமலையிலும் அம்பாறை மாவட்டத்திலும் பெரும்பான்மை இனத்தவர்கள் எமதுதாயக பூமியைச் சூறையாடி வருகின்றார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் அவர்களுக்குத் தெரியாமலேயே வடக்கு கிழக்கு இணைப்புக்கு அத்திவாரமிட்டுள்ளார்கள்.
இதனை நாம் சாதகமாகப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து வீதிகளையும் வெளிநாட்டின் உதவிகளுடன் புனரமைப்புச் செய்துள்ளார்கள். இது எம்மினத்திற்கும் வடகிழக்கு இணைப்புக்கு இவை பெரும் சாதகமாக அமைந்துள்ளது.
எம்மினத்தவர்கள் கிட்டத்தட்ட 12 லட்சம் போர் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். நமக்கு வடகிழக்கில் வேண்டிய நிலங்கள் உண்டு. வெளிநாட்டில் உள்ளவர்கள் மீண்டும் இங்கு வரும் வாய்ப்புக்கள் உள்ளன.
இவற்றுக்கு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் உந்து சக்தியாக அமைய வேண்டும்.
வடக்கு கிழக்கினைப் பொறுத்தமட்டில், வடக்கினைவிட கிழக்கு மாகாணம் மிகமோசமாகப் பாதிக்கப் பட்டதாகும். இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண ஆட்சியைக் கைப்பற்றும் அதற்கு கிழக்கு மாகாண மக்கள் தங்களது வாக்குச் சீட்டை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்.