புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2012

வீட்டில் எடுத்த 12 ஆயிரம் ரூபாவுடன் திருமலை செல்லத் தயாரான 3 சிறுவர் வியாழன் இரவு பஸ் நிலையத்தில் மாட்டினர் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணை
 வீட்டில் இருந்த 12 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு திருகோணமலை செல்லும் பஸ்ஸில் பயணிக்க முயன்ற 10, 11 வயதை உடைய சிறுவர்கள் மூவர் அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் முற்றவெளியில் உள்ள யாழ்.தனியார் பஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
பெற்றோருக்குத் தெரியாமலே இந்தச் சிறுவர்கள் மூவரும் இந்தச் செயலில் ஈடுபட்டதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
வண்ணார்பண்ணையைச் சேர்ந்த இந்த மூன்று சிறுவர்களும் அந்தப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயில்கின்றனர். இவர்களில் இருவர் சகோதரர்கள், மற்றவர் அயல் வீட்டைச் சேர்ந்தவர்.
 
இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் பாடசாலைக்குச் சென்றுள்ளனர். பாடசாலை முடிந்து வீடு சென்ற இவர்களில் சகோதரர்கள் இருவரும் தமது வீட்டில் இருந்த 12 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டனர். பின்னர் அயல் வீட்டில் இருந்த சிறுவனையும் அழைத்து யாழ்.நகரப் பகுதிக்குச் சென்றுள்ளனர். நகரில் உள்ள புடைவைக் கடை ஒன்றுக்குச் சென்ற அவர்கள் புதிய ஆடைகளையும் பின்னர் காலணிகளையும் கொள்வனவு செய்துள்ளனர். அதன் பின்பு முற்றவெளியில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்துக்குச் சென்ற அவர்கள் அங்கு மலசலகூடம் ஒன்றுக்குள் சென்று உடை மாற்றியுள்ளனர்.
 
இதனிடையே வீட்டில் தனது பிள்ளைகள் இருவரையும் காணாத பெற்றோர் பதை பதைத்துப் போயினர். இதனையடுத்து மாலையில் உடனடியாக யாழ்.பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தனர்.
 
சிறுவர்கள் மூவரும் திருகோணமலைக்குச் செல்லும் பஸ்ஸுக்காக ஆசன முற்பதிவை மேற்கொள்ளும் இடத்துக்குச் சென்று ஆசனப் பதிவு மேற்கொள்ள முயன்றனர். இவர்கள் சிறுவர்களாக இருந்தபடியால் சந்தேகம் கொண்ட மக்கள் உடனடியாக இது குறித்து அங்கு கடமையில் இருந்த பொலிஸாரிடம் விடயத்தைத் தெரியப்படுத்தினர். 
 
பொலிஸார் மூன்று சிறுவர்களையும் விசாரணை செய்தனர். இதனையடுத்து சிறுவர்களின் பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
இந்தச் சிறுவர்கள் மூவரும் என்ன காரணத்துக்காகத் திருகோணமலைக்குச் செல்ல முற்பட்டனர் என்பது குறித்த விசாரணைகளை யாழ். பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இந்தச் செயலின் பின்னணியில் யாராவது உள்ளனரா என்பது குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
 
மூன்று சிறுவர்களும் இவ்வாறு தனியே புறப்படுவதற்கு துணிந்தமை குறித்து தனியார் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகளும் ஆச்சரியமடைந்தனர்.

ad

ad