புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2012


520 பக்கற் ஹொரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் டெகிவளையில் கைது

ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய 520 பக்கற்றுகளுடன் பெண்ணொருவர் டெகிவளையில் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலத்தில் ஒரே தடவையில் பெருந்தொகையான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும் என
காவல்துறையினர் தெரிவித்தனர். இப்போதைப்பொருளின் எடை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், இது சுமார் 300 கிராம் எடையைக் கொண்டிருக்கலாம் எனவும் இதன் பெறுமதி சுமார் 15 லட்சம் ரூபாவாக இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹெரோயின் பக்கற்றுகளை பொதிசெய்து கொண்டிருந்தபோது 34வயதான இப்பெண் கைது செய்யப்பட்டார்.
இவர் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, இரத்மலானை, தெஹிவளை, கொ{ஹவளை பிரதேசங்களில் ஹெரோயின் போதைப்பொருள் விநியோகித்து வருபவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 27 பக்கெட் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இலங்கையைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்ணொருவரை அடுத்த மாதம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் நேற்று உத்தரவிட்டார்.
அப்பணிப்பெண்ணுக்கு எதிரான வழக்கின் காவல்துறையினரின் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த பெண்ணை பிணையில் விடுதலை செய்யுமாறு அவர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கான அனுமதியை வழங்க தனக்கு அதிகாரமில்லை என நீதவான் குறிப்பிட்டார்.
சந்தேகநபராக இந்த விமானப் பணிப்பெண்ணையும் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு நபரையும் எதிர்வரும் அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
tinakatir

ad

ad