புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2012


முல்லைத்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
முல்லைத்தீவு வெள்ளாம்முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு தொகை ஆயுதங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
27 ரீ-56 ரக துப்பாக்கிகள், 200 இனம் காணப்படாத தோட்டாக்கள், ரீ56 ரக மகசீன்கள் மற்றும் மேலும் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு வெள்ளாம்முள்ளிவய்க்கால் பிரதேசத்தின் நிலக்கீழ் பதுங்கு குழியொன்றில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆனால் இவை எப்போது மீட்கப்பட்டது என அச்செய்தியில் குறிப்பிடப்படவில்லை.
ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad