புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2012


சாரதிகளின் மரண விளையாட்டு- மூவர் பலி! 10க்கு மேற்பட்டவர்கள் படுகாயம்



!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1 :00 மணியளவில் நடைபெற்ற இரு பஸ்கள் நேருக்குநோ் மோதிய  விபத்தில் இரு சாரதிகளும் உயிரிழந்து 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பஸ்களின் சாரதிகள் இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக

தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை  சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேரூந்து ஒன்றும், தென்னிலங்கையிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மேலும் பத்துக்கு மேற்பட்டவர்கள்  படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருபாலை கற்பகபிள்ளையார் கோவிலடியில் இன்று இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகியுள்ளதோடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் 751 வழி இலக்க பேருந்தே யாழ்ப்பாணத்திற்கும் தங்காலைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உடன் மோதி விபத்துக்குள்ளாகியது
இதன்போது தனியார் பஸ்ஸின் சாரதியான உடுப்பிட்டியைச் சேர்ந்த அன்னலிங்கம் அமிர்தராஜா வயது 34 வேலாயுதம் செந்தில் ஆகிய இருவருமே மரணமானவர்களாவார்கள்.
இதுதவிர இவ்விபத்தில் கே.துஷார ருவான் என்ற இரண்டு சிங்களவர்களும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர் தவிர மேலும் பலர் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.


ad

ad