புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2012


யாழில் பாகிஸ்தான் வேவு தளம்! அதிர்ச்சியில் உறைந்த இந்தியா குழுவை இலங்கைக்கு அனுப்புகிறது
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியாவை வேவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் வேவு தளம் அமைத்துள்ளதாகக் கூறப்படுவது பற்றி விசாரணை நடத்த இந்திய குழு அந்நாட்டுக்கு செல்ல இருக்கிறது.
இலங்கையின் பாகிஸ்தான் தூதரகம் இந்தியாவுக்கு எதிரான உளவு வேலைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளே உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு நேரடியாக தகவல்களை பரிமாறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தமீம் அன்சாரி என்பவர் கைது செய்யப்பட்டார். பிடிபட்ட தமீம் அன்சாரியும் இதே தகவல்களையே தமிழக பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோர கடற்படை தளமான விசாகப்பட்டினத்தை வேவு பார்க்கும் வகையில் இலங்கையின் யாழ்ப்பாண பகுதியில் வேவு தளம் ஒன்றை பாகிஸ்தான் அமைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இதனால் கடும் அதிருப்தி அடைந்திருக்கும் இந்திய அரசு அண்மையில் இலங்கை அரசுடன் இது தொடர்பாக பேச்சுக்களை நடத்தியிருக்கிறது.
மேலும் இந்திய உயர்நிலைக் குழு ஒன்று இலங்கை சென்று அந்நாட்டு அரசுடன் இது தொடர்பாக விரிவாக விவாதிப்பதுடன் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சந்தேகத்துக்குரிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் இலங்கையை மையமாக வைத்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான மோதல் விஸ்வரூபமெடுத்து வருகிறது.

ad

ad