புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2012


லங்கை ராணுவத் தளபதி கொக்கரிப்பு : கலைஞர் பதிலடி
 திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:
இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா என்பவர் இலங்கை சிறப்புப் படையைச் சேர்ந்த 45 உயர் அதிகாரிகள் வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு பயிற்சிக்காக
வரவிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே?

அவர் மாத்திரமல்ல; இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்ஷேயின் சகோதரரும், இலங்கை அமைச் சருமான பசில் ராஜபக்ஷேயும் இதையேதான் சொல்லியிருக்கிறார். இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில்தான் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அதை எவராலும் தடுக்க முடியாதென்றும் சொல்லியிருக்கிறார்.


இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுபூர் வமான கோரிக்கை. அதனை யேற்று மத்திய அரசு உரிய வழியில் செயல்படும் என்று எதிர்பார்க்கிறேன்; செயல்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதைத் தடை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம்கூட ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது. எனினும் அதே தீர்ப்பில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவது என்பது அரசின் கொள்கை ரீதியான முடிவு என்றும், அந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் விளக்கி இருக்கிறது.

மத்திய ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜு கூறும்போது, இலங்கை, இந்தியாவின் நட்பு நாடு. இந்த அடிப்படையில் இலங்கை வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். மாநில அரசு சார்பில் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

எனவே இந்தப் பிரச்சினையில் முடிவெடுப்பது என்பது மத்திய அரசிடம் உள்ளதால், மத்திய அரசு காலம் தாழ்த்தாது இதில் நல்லதோர் முடிவினை எடுப்பார்கள், எடுக்க வேண்டு மென்று வலியுறுத் துகிறேன்.

ad

ad