புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2012

உதயகுமாருக்கு ஆதரவாக காங். எம்.எல்.ஏ.க்கள் வீடுகளை முற்றுகையிடுவோம்: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் அறிவிப்பு
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் இசங்கன்விளையில் உள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வீட்டில் இன்று நடந்தது.
 
கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செய்யது அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஹரீம், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ், தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் தினகரன், முஸ்லீம் முன்னேற்ற கழக முன்னாள் மாவட்ட பொருளாளர் முகம்மது யூசுப் மற்றும் லட்சுமி மணிவண்ணன், சூசை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் அனைவரும் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
 
கூடங்குளம் அணு உலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வீட்டை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடப் போவதாக கூறி இருந்தனர். பின்னர் அவர்கள் தேதி குறிப்பிடாமல் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
 
காங்கிரஸ் கட்சியினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். காங்கிரஸ் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி இருக்கும் கட்சி ஆகும். போராட்டம் நடத்த இவர்களுக்கு எந்தவொரு தார்மீக உரிமையும் கிடையாது.
 
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் ஜனநாயக பூர்வமான மக்களின் போராட்டம். வாழ்வாதாரத்துக்கான உரிமை போராட்டம். அதை அறவழியில் காந்திய வழியில் ஒருங்கிணைத்து வருபவர் உதயகுமார்.
 
நாகர்கோவிலில் உள்ள அவரது பள்ளி இடிக்கப்பட்டதற்கு போலீசாரும், அரசும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
காங்கிரஸ் கட்சியினர் உதயகுமார் வீட்டை முற்றுகையிட்டால் அதை தடுத்து நிறுத்துவோம். தேவைப்பட்டால் காங்கிரஸ் அலுவலகத்தையும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வீடுகளையும் முற்றுகையிடுவோம்.
 
கூடங்குளம் அணு உலையை மூடும்வரை அடக்குமுறைக்கு அஞ்சாமல் அறவழியில் போராடுவோம்.
 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

ad

ad