புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2012



சாம்பியன்ஸ் லீக் டி20: தகுதிப் போட்டியில் யுவா நெக்ஸ்ட் அணியை வீழ்த்தியது யார்க்‌ஷை
இந்தப் போட்டியின் முதன்மை சுற்றுப் போட்டிகள் வரும் 13-ம் தேதி துவங்க உள்ள நிலையில், தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று துவங்கின. இதில் இங்கிலாந்தை சேர்ந்த யார்க்‌ஷைர் அணியும், இலங்கையின் யுவாநெக்ஸ்ட் அணியும் மோதின.
 
இதில் முதலில் பேட்டிங் செய்த யுவா நெக்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கண்டம்பி அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து 151 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய யார்க்‌ஷைர் அணியின் ஜாக்குஸ் 32 ரன்கள் எடுத்து சிறப்பான துவக்கம் அளித்தார். ஒரு கட்டத்தில் அந்த அணி 66 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
 
ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மில்லர், ரஷித் ஆகியோர் மேற்கொண்டு விக்கெட் எதுவும் இழக்காமல் அந்த அணியை வெற்றிபெற வைத்தனர். இறுதியில் 19.3 ஓவர்களில் யார்க்‌ஷைர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. மில்லர் 39 ரன்னுடனும், ரஷித் 36 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ad

ad