புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2012

சூதாட்டத்தில் 6 நடுவர்கள்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணைக்கு உத்தரவு
கிரிக்கெட் போட்டியில் ‘மேட்ச் பிக்சிங்’ விவகாரம் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. வீரர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இதற்கு முன்பு நடந்தது


தற்போது வேலியே பயிரை மேய்ந்த கதையாக நடுவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட முயன்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லஞ்சம் பெற்றுக்கொண்டு யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக முடிவுகளை வழங்க 6 நடுவர்கள் ஒப்புக் கொண்டு உள்ளனர்.

இந்தியா டி.வி சேனல் புலனாய்வு செய்து இதற்கான வீடியோ காட்சிகளை வெளியிட்டது. சமீபத்தில் நடந்த 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும், இலங்கை பிரீமியர் ‘லீக்’ ஆட்டங்களிலும் முடிவுகளை மாற்றி அமைக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். 

பாகிஸ்தானை சேர்ந்த நதீம் கவுரி, அனீஸ் சித்திக், வங்காளதேசத்தை சேர்ந்த நதிர்ஷா, இலங்கையை சேர்ந்த தாமினி திசனாயகே, மவுரிஸ் வின்ஸ்டன், சகாரா கல்லேக் ஆகிய 6 நடுவர்கள் பணம் பெற்றுக்கொள்ள சம்மதித்தது வீடியோ பதிவில் தெரியவந்தது. நடுவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட ஒப்புக்கொண்ட இந்த வீடியோ பதிவில் பணபரிவர்த்தனை எதுவும் நடைபெறவில்லை. 

நடுவர்களே சூதாட்டத்தில் ஈடுபட ஒப்புக்கொண்ட விவகாரம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

வங்காளதேசத்தை சேர்ந்த ஷரபத்துல்லா என்ற நடுவர் மட்டும் சூதாட்டத்தில் ஈடுபட மறுத்து உள்ளார். இதற்கிடையே இந்த சூதாட்ட குற்றச்சாட்டுக்கு நதீம் கவுரி, நதிர்ஷா ஆகியோர் மறுத்து உள்ளனர். நதிர்ஷா கூறும்போது, நான் மட்டுமல்ல எந்த ஒரு நடுவரும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்றார். 

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த டி.வி. சேனலிடம் தகவல்களை அளித்து உதவுமாறு கேட்டுள்ளோம். 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நடுவர்களாக பணிபுரிந்தவர்கள் யாரும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. கேட்கும் அனைத்து விவரங்களையும் அளிக்க தயார் என் இந்தியா டி.வி தெரிவித்துள்ளது. இதேபோல வங்காளதேச கிரிக்கெட் வாரியமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ad

ad